2021 ஜூலை 26, திங்கட்கிழமை

லண்டனில் துப்பாக்கிப் பிரயோகம்: இலங்கைச் சிறுமி காயம்

Super User   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

5 வயதான இலங்கைச் சிறுமியொருத்தியை துப்பாக்கியால் சுட்ட குழுவினரை கைது செய்ய உதவுபவர்களுக்கு 50,000 ஸ்ரேலிங் பவுண் சன்மானம் வழங்குவதாக பிரிட்டனிலுள்ள கடை உரிமையாளர்கள் பலர் அறிவித்துள்ளனர்.

தெற்கு லண்டன் ஸ்டொக்வெல் பிராந்தியத்திலுள்ள கடையொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.
33,000 கடைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கடை உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் லோவ்மன் இது தொடர்பாக கூறுகையில், இச்சம்பவத்திற்கு பொறுப்பானவரை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு உதவ நாம்  விரும்புகிறோம். அதற்கு இந்நிதி பங்களிப்புச் செய்யும் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.

துரத்திச் செல்லப்பட்ட இரு இளைஞர்கள் அக்கடைக்குள் புகுந்ததாகும் மேற்படி குழுவைச் சேர்ந்த ஒருவர் துரத்திச் சென்ற மேற்படி குழுவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அதனால் இலங்கையைச் சேர்ந்த 5 வயதான சிறுமியான துர்ஷா நெஞ்சில் காயமடைந்தார்.

3 அவசர சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்ட அச்சிறுமி நேற்று கண்விழித்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .