2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை ; உச்ச வயது வரம்புக்கு எதிராக வழக்கு

Super User   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ். செல்வநாயகம்)

சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்குக்கு தோற்றுவதற்கு வயது உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக  மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ரொஹான் வீரசிங்க (38), பிரியந்த ராஜபக்ஷ (42) ஆகியோர் சட்டத்ததரணி மோகன் பாலேந்திரா ஊடாக இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்லூரி கவுன்ஸில், இலங்கை சட்டக் கல்லூரி அதிபர் டாக்டர் டபிள்யூ. டி. ரொட்ரிகோ, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க, சட்டமா அதிபர் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றுவதற்காக இதுகுறித்து விபரக் குறிப்பை  சட்டக் கல்லூரி கவுன்ஸிலிடமிருந்து பெற்றதாகவும் அதில் இப்பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்ப முடிவுத் திகதியில் குறைந்தபட்ச வயதெல்;லை 18 எனவும் அதிக பட்ச வயதெல்லை 35 ஆகவும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

தமக்கு தேவையான சகல தகைமைகளும்இருந்த போதிலும் தற்போது தாம் 35 வயதைக் கடந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

35 வயது பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அதிகபட்ச வயதெல்லை னஎ;பது நியாயமற்ற, பகுத்தறவிற்ற, நேர்மையற்ற, தன்னிச்சையான நடவடிக்கை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் சட்டக்கல்லூரி பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அதிபட்ச வயதெல்லை 35 வருடங்கள் என்ற விதியை நீக்கும்படியும் தம்மை பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்குபம்படி பிரதிவாதிகளுக்கு உத்தரவிடும்படியும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .