Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 02 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
118 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானமொன்றின் கூரையில் திடீரென துவாரம் ஏற்பட்டதால் அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சௌத்வெஸ்ட் எயார்லைன்ஸை சேர்ந்த இவ்விமானம் கலிபோர்னியா மாநிலத்தின் சாக்ரமென்டோ நகரிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடியோசை போன்ற சத்தம் கேட்டதாக விமானத்தில் பயணம் செய்த பிரெண்டா ரீஸ் எனும் பெண் தெரிவித்துள்ளார்.
"விமானத்தின் கூரையில் திடீரென பாரிய துவாரம் ஏற்பட்டது. அதற்கூடாக வானத்தை பார்க்க முடிந்தது' என அவர் கூறினார்.
விமானத்திற்குள் காற்றழுத்தம் குறைந்ததால் ஒட்சிசன் முகமூடிகள் இறக்கப்பட்டன
பின்னர் இவ்விமானம் இராணுவத் தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தையடுத்து விமானத்தை 36,000 அடி உயரத்திலிருந்து 11,000 அடி உயரத்திற்கு விமானி இறக்கியதாக அமெரிக்க சமஷ்டி வான்போக்குவரத்து நிர்வாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் திடீரென துவாரம் ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
11 minute ago
22 minute ago
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
45 minute ago
52 minute ago