Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பால்மா வகைகளின் விலைகளை அதிகரிக்குமாறு பால்மா கம்பனிகள் முன்வைத்த கோரிக்கையை நுகர்வோர் அதிகாரசபை நிராகரித்துள்ளது.
'அனைத்து பால்மா கம்பனிகளும் பால்மா வகைகளின் விலையை அதிகரிக்குமாறு கோரியிருந்தன. ஆனால் நாங்கள் அதனை நிராகரித்துள்ளோம்' என நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் இன்று தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் பால்மா கம்பனிகளுக்கு நிவாரணமாக வரியொன்றை அமைச்சு நீக்கியதாகவும் அவர் கூறினார்.
'இந்தத் தருணத்தில் மீள் விலை நிர்ணயம் குறித்து நாங்கள் கவனம் செலுத்தவில்லை. உலக சந்தையில் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது எதிர்காலத்தில் விலை அதிகரிப்பு குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்' என ரூமி மர்சூக் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .