2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

பிணையில் செல்ல உதவுங்கள் : த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை

Super User   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

"எந்த வித குற்றங்களும் செய்யாமல் 17 வருடங்களுக்கு மேலாக சிறையில் எந்தவித தீர்ப்போ தண்டனையோ இன்றி நீதி மன்றம் ஏறி இறங்கிக் கொண்டு வாடிக்கொண்டு இருக்கின்றோம். தீர்ப்பு வெளியாகுவதற்கு முன்னர் நாம் பிணையில் செல்ல அரசாங்கம் உதவ வேண்டும் அதற்கு அரசாங்கத்துடன் பேசுங்கள்" என நியூ மகசின் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரியுள்ளனர்.

வியாழக்கிழமை த.தே.கூ.நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, ஈ.சரவணபவன் ஆகியோர் நியூ மகசின் சிறைச் சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டபோதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"போராளிகளாக இருந்தவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர் எம்மைப் பற்றிக் கவலைபடவில்லை.  எமக்கு விடுதலைக்கு முன்னர் பிணையில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் அத்துடன் எமக்கு சட்டத்தரணிகளை ஒழுங்கு செய்து தர வேண்டும்" எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருடன் பொன்.செல்வராசா  எம்.பி. பேசிய போது இவர்களது விடுதலை தொடர்பாக இந்த மாதக் கடைசியில் கலந்துரைடாடவுள்ளதாக் தெரிவித்ததாக பொன்.செல்வராசா எம்.பி. தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .