2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான நிர்மாணச் செலவு பலமடங்காக அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான உத்தேச செலவு ஒரு சில வருடங்களில் 9.0 பில்லியன் ரூபாவிலிருந்து 32.0 பில்லியன் ரூபாவாக அதிகரித்தமை பலரையும் திகைக்க வைத்துள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி இந்தத் திட்டம் கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்பித்தபோது இதற்கான செலவு 9,516 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் 2003ஆம் ஆண்டும் இத்திட்டம் ஐ.தே.க. அரசாங்கத்தால் கைவிடப்பட்டது.

இந்த 3 வருட காலத்தில் ஆரம்பக்கட்ட செலவாக 5,444 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டது.

முதலில் இந்த வேலைக்கான ஒப்பந்தம் டேவூ கீஞைம் என்னும் தென்கொரிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

பின்னர் 2009ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இந்த செயற்றிட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. புதிய செலவு மதிப்பீடு 32,120 மில்லியன் ரூபாவாக இருந்தது. இதற்கான ஒப்பந்தம் சீனா மெற்றாலேஜிக்கல் குரூப் கோப்பரேசன் என்னும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.


  Comments - 0

  • anaicoddai.com Thursday, 21 June 2012 10:18 PM

    வணக்கம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .