2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

அலரி மாளிகையில் பொருட்களை திருடியவர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

அலரி மாளிகையிலுள்ள ஜனாதிபதியின் பிரத்தியேகசெயலாளர்  அலுவலகத்திலிருந்து எழுது பொருட்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட 3 சந்தேக நபர்களை ஏப்ரல் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை விடுமுறைக்கால நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர் இந்திக கருணஜீவ, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி என் அபேவர்தனவிடம் செய்த முறைப்பாட்டையடுத்து தாம் விசாரணைகளை மேற்கொண்டதாக  குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலக அலுவலகத்தில் ஒபிஸ் பியோன்களாக பணியாற்றும் இரு நபர்கள் , அலரி மாளிகையின் களஞ்சியத்திலிருந்து எழுதுபொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தில் மாற்றங்களை செய்து பொருட்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .