2021 மே 13, வியாழக்கிழமை

'கடல் எல்லை சுட்டிக்காட்டி கருவி' தயாரிப்பு

Super User   / 2011 ஜூன் 13 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அதைத் தவிர்ப்பதற்கு உதவக்கூடிய 'கடல் எல்லை சுட்டுக்காட்டி' (MBI) கருவியொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சென்.ஜோசப் கல்லூரி பொறியியல் பிரிவு மாணவர்கள் இக்கருவியை தயாரித்துள்ளனர்.

இக்கருவியை மீன்பிடிப் படகுகளில் பொருத்தியவுடன் அது ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் படகு இருக்கும் நிலையை கண்டறியும்.  படகு ஆபத்தான வலயத்தை (எல்லையிலிருந்து 0.5 கிலோமீற்றருக்கு உட்பட்ட பிரதேசம்) அடைந்தவுடன் அக்கருவி எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பும்.

கடல்எல்லையை படகு நெருங்கினால் அதன் எரிபொருள் விநியோகத்தை மேற்படி கருவி துண்டித்து படகின் இயந்திரத்தை நிறுத்தச்செய்துவிடும். இதனால் எல்லை கடக்கப்பட மாட்டாது என இக்கருவியை தயாரித்த பின்ஸி பேர்பேட்சுவா கூறியுள்ளார். தனது சக மாணவரான நெல்சன் நவீனுடன் இணைந்துஅவர் இக்கருவியை உருவாக்கியுள்ளார்.

'இயந்திரம் நிறுத்தப்பட்டபின், படகிலுள்ளவர்கள் அவசரநிலை பொத்தானொன்றை அழுத்தி திரும்பிச் செல்லலாம். ஆபத்து வலயத்திற்குள் ஒரு தடவை மாத்திரமே இவ்வாறு செய்யமுடியும் என நெல்சன் கூறினார்.

இக்கருவிக்கு சுமார் 2,000 – 2,500 இந்திய ரூபா மாத்திரமே செலவாகும் எனவும் பின்ஸி தெரிவித்துள்ளார். இக்கருவிக்கான காப்புரிமையைப் பெறுவதற்கு இவர்கள் வி;ண்ணப்பித்துள்ளனர். (The hindu)
 


  Comments - 0

 • asker Monday, 13 June 2011 11:48 PM

  இந்திய மீனவர்கள் இதை பொருத்த மாட்டார்கள் ,காரணம் இலங்கை எல்லையில் தான் அதிகமான மீன்கள் இருக்கின்றது ,வரம்பு மீறி வரத்தான் பார்பார்கள்.

  Reply : 0       0

  ameer Tuesday, 14 June 2011 01:01 AM

  இந்தியன் மீனவர்கள் எல்லை தெரியாமல் வருவதில்லை.
  இலங்கை வளங்களை சுரண்ட வருகிறார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .