2021 மே 15, சனிக்கிழமை

தற்போதைய சீபா உடன்படிக்கையில் கையெழுத்திடக்கூடாது: ஐ.தே.க.

Super User   / 2011 ஜூன் 15 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுடனான பரந்துபட்ட பொருளாதார பங்குடைமை உடன்படிக்கை யில் (சீபா); அதன் தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடக் கூடாது எனவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடியதாக அதை மாற்ற வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் சமமான நன்மைகளை வழங்க வேண்டும் எனவும் தற்போதைய அந்த ஒப்பந்த விடயங்கள் இந்தியாவுக்கு சாதகமானதாக உள்ளதெனவும் ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

உள்ளூர் தொழிற்துறையினரின் உணர்வுகளை அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும் எனக்கூறிய திஸ்ஸ அத்தநாயக்க, மேற்படி ஒப்பந்தத்தை தற்போதைய நிலையிலேயே கையெழுத்திடுவதற்கு வெளிவிவகார அமைச்சர்  இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது இணக்கம் தெரிவித்ததாகவும் அதை இந்திய - இலங்கை கூட்டறிக்கை  தெளிவுபடுத்துவதாகவும் கூறினார். 

இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயகக்க கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .