Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
மாலபேயில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரிக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) கூடவுள்ளது என அச்சங்கம் இன்று தெரிவித்தது. 180 மருத்துவர்கள் இச்சங்கத்தின் செயற்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
சுகாதார அமைச்சு நியமித்துள்ள ஐந்து அங்கத்தவர் குழு அதன் அறிக்கையை இரண்டு மாதங்களில் வெளியிடும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் உபுல் குணசேகர கூறினார். அதுவரையில் புதிய மாணவர்களை அங்கு சேர்க்க வேண்டாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கண்டியிலும் பத்தரமுல்லையிலும் வேறு 21 இடங்களிலும் தனயிhர் மருத்துவ கல்லூரிகளை அமைக்கப்பேவாதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறியுள்ளதாக டாக்டர் உபுல் குணசேகர தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
22 Oct 2025
red Sunday, 25 September 2011 12:51 AM
ஒவ்வரு தாக்கத்திற்கும் மறு தாக்கம் உண்டு . என்ன தாதியர் பட்டப்படிப்பு வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு சிறந்த தாதியர் உருவாகுவதை தடுத்தீர்கள். இப்போது இது வேற. திறமை உள்ளவன் படிக்கட்டும். வெளிநாடுகளில் சுகாதார சேவை என்ன பாலாகி போட்டுதா ? அவர்களின் சுகாதாரம் உயர்ந்துள்ளது . தயவு செய்து மற்றவர்களையும் முன்னேற வழி விடுங்கள்.
Reply : 0 0
Mohammed Hiraz Sunday, 25 September 2011 07:43 AM
எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பளிப்பதே மனிதனாய் பிறந்த ஒவ்வொருத்தனும் போற்றி காத்து வளர்க்க வேண்டிய பண்பாடாகும்!!!! சம்மந்தமே இல்லாமல் மிக நெருக்கடிமிக்க ஒரு போட்டி பரீட்சை மூலம் உயர்தரம் பெறுபேறு என்ற பெயரில் தெரிவானோர் மட்டுந்தான் வைதிய துறையில் கல்வி பயில வேண்டுமா? கொஞ்சம் உங்களை சுற்றி உள்ள நாட்டில் மருத்துவத்தில் திறமையும் புலமையும் போனவர்களின் பின் புலத்தை அவதானிப்பீர்கள் எனில் அனேகமாக அவர்கள் உயர்தர போட்டி பரீட்சையில் உரிய அடைவை எட்டாது உயர்தத்தின் பின் அயல் நாடுகளில் மருத்துவம் படித்து வந்தவர்களாகவே நூற்றுக்கு தொன்னூறு வீதம் இருக்கிறார்கள். விடயம் இப்படி இருக்க உங்களை விட திறமை மிக்க வைத்தியர்கள் தோன்றி இந்த நாட்டு மக்களின் பிணி தீர்க்க பாடுபடுவதை ஏன் தடுக்க முனைகிறீர்கள்? கல்வியில் சம வாய்மை கொடுங்க.
Reply : 0 0
imthy Sunday, 25 September 2011 02:39 PM
இந்த தீர்மானம் சரியானது. அப்போதுதான் நாட்டின் கல்வி அபிவிருத்தி அடையும். பொது மக்களின் சுகதரமும் மேம்படும்.
இது போல் சகல துறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். அரசுக்கு எமது ஆதரவும் பாராட்டுக்களும் என்றும் உள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
22 Oct 2025