2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

2011இல் மின் கட்டணம் 15 வீதம் அதிகரிப்பு?

Menaka Mookandi   / 2010 நவம்பர் 02 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மின்சார சபைக்கு வழங்கப்படும் எரிபொருள் சலுகை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நிறுத்தப்படும் பட்சத்தில் அதற்காக செலவிடப்படும் நிதியை திரட்டுவதற்கு மின் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க நேரிடும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சலுகை நிறுத்தப்படுமாயின் குறித்த கூட்டுத்தாபனத்துக்கான எரிபொருட் கொள்வனவுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபா செலவிடப்பட வேண்டி ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த மின்சார சபைக்கு தற்போது ஒரு லீற்றர் மசகு எண்ணெய் 40 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 60 ரூபாவுக்கு வழங்கப்படவுள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X