2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

'மகளிர் மட்டும்' பஸ்கள் முயற்சி கைவிடப்பட்டுள்ளது: அமைச்சர்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யொஹான் பெரேரா

 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணம் செய்ய இலங்கைப் பெண்கள் விரும்புவதில்லை. எனவே இலங்கை பஸ்களை அறிமுகம் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் கூறினார்.

ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம சில பெண்கள் 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணிக்க விரும்புவதில்லை என தனக்கு நேரில் தெரிவித்ததாக நாடாளுமன்றில் கூறினார்.

அண்மையில் நான் ரயிலில் பயணித்தபோது பெண்களுக்கென தனியாக பெட்டிகளை ஒதுக்க வேண்டுமா என கேட்டபோது அவர்கள் தாம் தனித்து பயணிக்க விருப்பவில்லை என கூறினர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
ஆகையால் 'மகளிர் மட்டும்' ரயில் பெட்டித்திட்டத்தையும் கைவிட்டு விட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

  Comments - 0

  • anufir Friday, 06 December 2013 05:29 PM

    எவ்வளவு விடயங்களை மக்களிடம் கேட்காமல் அமுல்படுத்துகிறோம். இந்த மாதிரி நல்ல விடயங்களை செய்ய ஏன் மக்களில் பழி போடுகிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .