Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ. நா அமைதிக்காக்கும் பணிக்கு தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை மகிழ்ச்சியடைகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐ. நா அமைதிகாக்கும் படையின் காரணமாக இன்று உலகம் பாதுகாப்பாக உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் இப்பணியில் இருந்தபோது தங்களது உயிர்களைத் தியாகம் செய்த நூற்றுக்கனக்கான அமைதிகாக்கும் பணியாளர்களை நினைவுகூர்ந்து நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைச் செலுத்துவதோடு, அவர்களது பணிகளை அங்கிகரித்து பாராட்டுவோம் என்றும் தெரிவித்தார்.
ஐ. நா தலைமையகத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஐ. நா அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக ஐ.நா அமைதிகாக்கும் முயற்சிகளுக்கு இலங்கை தன்னடக்கமான பங்களிப்புகளைச் செய்துவந்துள்ளது. ஐ நா அமைதிகாக்கும் திணைக்களத்தின் நடவடிக்கைகளில் இலங்கையின் ஒத்துழைப்பை இவ்வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத்; தொடர்ந்து ஐ.நா உடனான உடன்பாடான ஈடுபாட்டிற்கான அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு விரிவாக்கமாகவே கருதுகிறோம் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அமைதி நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட குழுவின் அறிக்கை சிவிலியன்களின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முக்கிய கடப்பாடாக அடையாளப்படுத்துகிறது. ஐ.நா அமைதிகாக்கும் பணியாளர்கள் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குக் கிடைக்கும் எல்லா கருவிகளையும் பயன்படுத்த வேண்டுமென அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கையில் சிவிலியன்களைப் பாதுகாப்பது தொடர்பான கிகாலி கோட்பாடுகளை இலங்கை அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பில் மேலும் பல நாடுகள் இணைந்து கொள்ளுமென நாம் எதிர்பார்க்கிறோம். என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாடு அமைதிகாக்கும் பணிகள் அதன் ஆணையை மிகச் சரியாக நிறைவேற்றும் வகையில் அதற்குத் தேவையான மேலும் பல வளங்களை வழங்குவன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துமென நாம் எதிர்பார்க்கிறோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago