2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

206 முன்னாள் போராளிகள் நாளை விடுதலை

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

புனர்வாழ்வளிக்கப்பட்ட 206 முன்னாள் போராளிகள் நாளை வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த  ரணசிங்க- தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இவர்களில் 205 ஆண் முன்னாள் போராளிகளும் ஒரு பெண் முன்னாள் போராளியும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் போராளிகள் சமூகத்தோடு இணைக்கும் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இதனை விட அதிகமான இன்னுமொரு தொகுதி புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுவிக்கப்படவுள்ளதாக சுதந்த ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .