2021 ஜூன் 24, வியாழக்கிழமை

23 இலங்கை தமிழர்கள் தமிழ் நாட்டு பொலிஸாரினால் கைது

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு  தப்பிச்செல்ல முயன்ற 23 இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டுப் பொலிஸார்  நேற்று கைதுசெய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகுகளின் மூலம் தப்பிச்செல்ல முயன்றதாக மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து,  இந்த 23 பேரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கை கடல் எல்லைப் பகுதி  வரை செல்வதற்காக இவர்களிடமிருந்து 5000 ரூபா பணம் அறவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .