2021 ஜூன் 24, வியாழக்கிழமை

துஷ்பிரயோகத்திற்குள்ளான 24 இலங்கைப் பணியாளர்கள் ஜோர்தானில் நிர்க்கதி

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமது எஜமானர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கைப் பணிப்பெண்கள் 24 பேர் தாயகதிற்கு திரும்ப ஜோர்தான் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

வீட்டுப் பணியாளர்கள் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த இவர்களால் முடியாத நிலையில் ஜோர்தான் தலைநகர் அம்மானில் கடந்த ஜனவரி மாதம் முதல் நிர்க்கதியாகியுள்ளனர்.

ஜோர்தானில் தங்கியிருப்பதற்கான உரிய ஆவணங்களைக் கொண்டிருக்காமைக்கு இவர்கள் பொறுப்பாளிகள் அல்ல. தமது  நிலையை சீராக்கி கொள்ள இவர்களால் முடியாதுள்ளது. குறைந்த ஊதியம் காரணமாக அபராதத் தொகையை செலுத்த முடியவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

'துஷ்பிரயோகம் இடம்பெறும் வீடுகளிலிருந்து தப்பியோடிய இந்த ஊழியர்களுக்கு நாளாந்தம் அபராதம் விதிப்பதன் மூலம் ஜோர்தான் இவர்களை தண்டிக்கிறது. இதனால் இவர்கள் தமது குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல முடியாதுள்ளது' என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கிற்கான சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோப் விக்கில் தெரிவித்துள்ளார்.

வீடுகளிலிருந்து தப்பிவந்து இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த 37 இலங்கை பணியாளர்கள்,  தாம் இலங்கைக்குத் திரும்புவதற்கு தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறி கடந்த ஜனவரி 24 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறினர்.  அவர்களில் சிலர் அபராதம் செலுத்த உதவியளிக்கப்பட்டதன் பின்னர் தாயகம் திரும்பியினர். சிலர் நாடு கடத்தப்பட்டனர். ஆனால் 24 பேர் தொடர்ந்தும் ஜோர்தானில் நிர்க்கதியாகியுள்ளனர்.


  Comments - 0

  • rex Saturday, 09 April 2011 10:01 PM

    இலங்கை வெளிநாட்டு பணியகம் என்ன செய்கிறது? அவர்கள் வெளிநாட்டுக்கு வரும்போது பணத்தை கறப்பதில் மட்டும் மும்முரமாக உள்ளது .அதை வசூல் பண்ண விமான நிலையத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .