Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரமழான் பெருநாள் தினமான நேற்று கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 24 பேர் கலால் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 முற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டு இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கசிப்பு தயாரிக்கப்படும் நிலையங்கள், மதுபானம் விற்பனை செய்யப்படும் கடைகள், மறைவிடங்கள் என்பன சோதனையிடப்பட்டு சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக கலால் திணைக்களத்தின் கொழும்பு விசேட புலனாய்வுப் பிரிவுத் தலைவர் உபுல் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
நுகேகொடை, மினுவாங்கொடை,மீரிகம, ருவான்வெல்ல ஆகிய இடங்களில் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்பகுதிகளிலுள்ள மக்கள் தெரிவித்த புகார்களையடுத்து கலால் திணைக்களப் பணிப்பாளர் வசந்த ஹப்புஆரச்சியின் பணிப்பின்பேரில் இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர்கள், விசாரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர் என உபுல் செனவிரட்ன தெரிவித்தார்.
20 minute ago
21 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
57 minute ago
1 hours ago