2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

3 சிறுமிகள் வன்புணர்வு குழு நியமித்து விசாரிக்குமாறு வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 மே 30 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு, திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.  

திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை திங்கட்கிழமை (29) தொடர்புகொண்டு முதலமைச்சர் பேசினார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், பல கோணங்களில் விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் முதலமைச்சரிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.  

சிறுமிகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .