2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஆஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதி சேகரித்த 3 பேர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்

Super User   / 2010 பெப்ரவரி 02 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த 3 தமிழர்கள்  தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டுக்கும், 2007ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரூரன் விநாயகமூர்த்தி, சிவராஜ் யாதவன், ஆறுமுகம் ரஜீவன் ஆகியோர் நிதி சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை ஒத்துக்கொண்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 3 ஆண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியன் நிதி சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மூவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லர் என்றும்,நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்றும் ஆஸ்திரேலிய அரசதரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .