2021 ஜூன் 16, புதன்கிழமை

49 பெண்கள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம்

Super User   / 2010 பெப்ரவரி 19 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

செட்டிகுளம் மெனிக்பாம் முகாம், பம்பைமடு பெண்கள் முகாம் ஆகிய முகாம்களிலிருந்து 49 பெண்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 14ஆம் திகதி வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக யாழ் குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து 10 பேரும், கிளிநொச்சியிலிருந்து 17 பேரும் முல்லைத்தீவிலிருந்து 14 பேரும், மன்னாரிலிருந்து 4 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா, புத்தளம், அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களிருந்து தலா ஒருவர் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் பெண்களின் பெயர் விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் அலுவலகத்தில் பார்வையிடமுடியும் எனவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .