Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 5,000 ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த நாணயக் குற்றியை உத்தியோகபூர்வமாக கையளித்து வெளியிட்டு வைக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த இலங்கை மத்திய வங்கி தனது 60ஆவது ஆண்டு நிறைவை இவ்வருடம் பூர்த்தி செய்த நிலையிலேயே மேற்படி நாணயக் குற்றியை வெளியிட தீர்மானித்துள்ளது.
பல நிறங்களைக் கொண்ட வகையில் அச்சிடப்படவுள்ள மேற்படி நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் ஒன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்த நாணயக் குற்றி அச்சிடப்பட்டுள்ளதால் 5,000 பெறுமதியான இந்த நாணயக் குற்றி 7,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதான அலுவலகத்திலும் அதன் ஏனைய கிளை அலுவலகங்களிலும் இந்த நாணயக் குற்றியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
M.Jaffar Wednesday, 15 December 2010 11:43 PM
Five Thousand coins in offar Seven thousan? why makkal appadiyum muttalhalaa...
Reply : 0 0
yarro oruvan Thursday, 16 December 2010 12:42 AM
முட்டாள்கள் இருப்பதால்தான் இப்படியும் 5000 ரூபா நாணயங்களை ஸ்ரீ லங்காவில் அறிமுகப்படுத்துகின்றார்கள். தேசிய கீதம் தமிழில் இல்லை என்று சொன்னவர்களுக்கு இது ஒன்றும் பெரிது இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
54 minute ago
1 hours ago
3 hours ago