2025 மே 19, திங்கட்கிழமை

“நான் பிசியாக இருக்கிறேன்”

R.Tharaniya   / 2025 மே 19 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சூரியன் நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்' திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

அப்போது, விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் "அவர் அழைத்தால், அவருடைய கட்சியில் சேருவீர்களா? தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய சூரி, "எனக்கு நிறைய திரைப்பட வேலைகள் இருக்கிறது. அதை பார்க்க வேண்டும். உங்களை நான் திடீரென அழைத்தால், என்னோடு நீங்கள் வருவீர்களா?" என்று கேட்டார்.

 மேலும், "நடிகர் விஜய் சரியான திசைகளில் சென்று கொண்டிருக்கிறார். என் வேலையை நான் பார்க்கிறேன்," என்றும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X