2025 மே 19, திங்கட்கிழமை

மீண்டும் ரொமான்ஸ்?

R.Tharaniya   / 2025 மே 19 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் மணிரத்தினம்  சரித்திரக் கதை அமைப்பை கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் இயக்கிய பின்னர், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்த அதிரடி ஆக்ஷன் படமான ‘தக்லைஃப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஜூன் 5ஆம் திகதி வெளியாக இருக்கின்றது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதையை அடிப்படையாக கொண்டதாகவும், கிட்டத்தட்ட 'ஓகே கண்மணி' போன்ற கதை அம்சம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும், பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக இதில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘தக்லைஃப் படம் வெளியாகியவுடன், இந்த புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X