2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஏ- 9 வீதியூடான போக்குவரத்திற்கு தனியார் பஸ்க்கு அனுமதி இல்லை

Super User   / 2010 ஜனவரி 12 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திற்கும், கண்டிக்கும் இடையிலான ஏ- 9 வீதியூடாக தனியார் பஸ்கள்  செல்வதற்கான  அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

எனினும், சட்டத்திற்கு புறம்பான வகையில் சில தனியார் பஸ்கள்  சேவையில் ஈடுபட்டமை தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாக தனியார் பேரூந்து நிறுவனத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

இதேவேளை, டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் வி.ஏ.லிபினிஸ், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன், ஏ- 9 வீதி போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டிருப்பதுடன், இந்த  வீதியூடாக 24 மணித்தியாலமும்  பஸ்கள்  பயணிப்பதற்கு தடையில்லையெனவும் வி.ஏ.லிபினிஸ் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .