Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 02 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்று கிங்ஸ்போ விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த, மலேசியாவில் நடைபெற்ற கணிதவியல் போட்டியில் உலகம் முழுவதிலிமிருந்து கலந்து கொண்ட 6,000 போட்டியாளர்களில் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்று நம் நாட்டுக்கும், அக்கரைப்பற்று மண்ணுக்கும் பெருமை சேர்த்த எம்.ஆர். லபீத் அஹமட்’ஐ பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
இதன் போது அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை இடம்பெற்ற பின்னர் பிரதான வீதியிலும், உள் வீதிகளிலும் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பாரிய வரவேற்பும், கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
ஊர்வலத்தின் போது பொதுமக்களினாலும், நண்பர்களினாலும் மற்றுமம் கல்விமான்களாலும் பரிசில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். சுல்பிகார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago