Janu / 2026 ஜனவரி 22 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்

அரசாங்கம் முன்வைத்துள்ள கல்வி சீர்திருத்தங்களைப் பற்றிய சர்ச்சையைப் பற்றிய கடந்த புதன்கிழமைக்கான தமிழ் மிரருக்காக நாம் எமது கட்டுரையை எழுதும் போது அந்த சர்ச்சை மேலும் பல மாதங்கள் நீடிக்கலாம் என்றே நினைத்தோம். ஆனால் அந்த கட்டுரை தமிழ் மிரரில் வெளியாவதற்குள் அச்சர்ச்சசை ஓயந்துவிட்டது.
அச்சீர்த்திருத்தங்களில் ஆறாம் ஆண்டுக்கான சீரத்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்தி வைப்பதாக கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவை முடிவு செய்தமையே அதற்குக் காரணமாகும்.
அரசாங்கத்தின் முடிவு சரியோ பிழையோ அது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் திருப்தியை அளித்திருப்பதாகவே தெரிகிறது. அந்த திருப்தி கல்வித் துறைக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு நன்மை காரணமாக ஏற்பட்ட திருப்தியல்ல. அது அரசியல் ரீதியாக ஏற்பட்ட திருப்தியாகும்.
நாம் அரசாங்கத்தை மண்டியிடச் செய்தோம் என்று இப்போது எதிர்க்கடசிகள் கூறி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் நெருக்குதல் காரணமாக நாம் முன்வைத்த எந்தவொரு சீர்திருத்தத்தையும் கைவிடவில்லை என்றும் ஆறாம் ஆண்டுக்கான சீர்திருத்தங்களை மட்டும் ஒத்திப்போட்டுள்ளளோம் என்றும் அரச தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இப்போது எவரும் எவருக்கும் தோல்வியடையவில்லை. சர்ச்சையும் முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலைமைகளைத் தான் ஆங்கிலத்தில் றin-றin ளவைரயவழைn என்கிறார்கள்.
ஆறூம் ஆண்டுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் தவிர்ந்த ஏனைய ஆண்களுக்கான சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதை இப்போது எவரும் எதிர்ப்பதில்லை. அதனால் தான் சர்ச்சை ஓய்ந்துள்ளது. அரசாங்கம் கல்விச் சீர்திருத்தங்களை கைவிடும் வரையும் கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இராஜினாமாச் செய்யும் வரையும் சத்தியாக்கிரகம் செய்வதாக கல்வி அமைச்சின் முன் அமர்ந்திருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் 13 ஆம் திகதியே அந்த சத்தியாக்கிரகத்தை கைவிட்டுவிட்டார்.
ஆறாம் ஆண்டுக்கான ஆங்கில மொடியூல் (பாட புத்தகம்) தவிர்ந்த அவ்வாண்டுக்கான ஏனைய பாடப்புத்தகங்களைப் பற்றியும் எவரும் இப்போது எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் ஆறாம் ஆண்டுக்கான ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய பாட புத்தகங்களைக் ஒவ்வொன்றாக காட்டிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ இவற்றுக்கு உங்களில் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா என்று கேட்டார். எவரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறவில்லை.
ஆங்கில மெடியூலிலும் ஒரு பக்கத்தில் இடம்பெற்ற ஒரு இணைப்பை மட்டுமே அவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் போலும். அவ்வாறாயின், ஆறாம் ஆண்டு தவிர்ந்த ஏனைய ஆண்டுகளின் மொடியூல்களில் பிரச்சினை எதுவம் இல்லையென்றால், ஆறாம் ஆண்டிலும் ஆங்கில மொடியுலில் ஒரு பக்கத்தில் மட்டும் தான் பிரச்சினை இருந்தது என்றூல் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மொத்த கல்விச் சீர்திருத்தங்களையும் வாபஸ் பெற வேண்டுமு; என்றும் பிரதமர் தமது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என்றும் நாட்டை குழப்பி, பௌத்த பிக்குகளையும் உசுப்பேற்றி பெரும் கலாட்டாவை செய்ததற்குக் காரணம் என்ன?
கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதை தாம் எதிர்ப்தில்லை என்றும் கல்வியை ஆபாசமயமாக்குவதையே தாம் எதிர்ப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியிருந்தார். ஆபாசம் என்று கூறுவதற்கு இந்த புதிய கல்வி சீர்த்திருத்தங்களில் ஒரே ஒரு விடயம் மட்டுமே இருந்தது. ஆறாம் ஆண்டு ஆங்கில மொடியூலில் ஓரிடத்தில் ஓரினச்சேர்க்கையை பரப்பும் இணையத்தளமொன்றின் இணைப்பொன்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை யார் அதில் சேர்தது என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
சகல ஆண்டுகளுக்குமான மொடியூல்களை தேசிய கல்வி நிறுனமே தயாரித்தது. இந்த இணைப்பு விவகாம் தொடர்ப்பில் நடைபெற்ற விசாரணையொன்றின் விளைவாக கடந்த திங்கட்கிழமை அந்நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமறையில் அனுப்பப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் மேலும் இரண்டு பெண் அதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச கூறுவதைப் போல் அரசாங்கம் கல்வித்துறையை ஆபாசமயமாக்குவதாக இருந்தால் கல்வி அமைச்சரோ அல்லது அரசாங்கத்தின் வேறு எவரோ இந்த சர்ச்சைக்குரிய இணைப்பபை ஆறாம் ஆண்டு ஆங்கில மொடியூலில் புகுத்துமாறு சம்பந்நதப்பட்ட அதிகாரிகளிடம் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு நடந்துள்ளதா? அதற்கான ஏதாவது ஆதாரம் சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாக இருந்தால் அவர் அதனை மக்கள் முன் வைக்க வேண்டும்.
இந்த தகாத இணைப்பைப் பற்றி முதலாவதாக அறிந்து அதனை பகிரங்கப்படுத்தியவர்கள் உண்மையிலேயே அதனை எடுத்த எடுப்பிலேயே அவ்வாறு பகிரங்கப்படுத்தி இருக்கக்கூடாது. அவர்கள் முதலில் அதைப் பற்றி தேசிய கல்வி நிறுவனத்தின் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்து அது எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிய முயன்றிருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் கொள்கை காரணமாகவோ தேவை காரணைமாகவே அது புகுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுவதாக இருந்தால் அதனை சம்பந்நதப்பட்ட அரசியல்வாதிகளிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அரசியல் கொள்கை காரணமாக அது புகுத்தப்ட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவந்திருந்தால் மட்டுமே அதனை பிரச்சினையாக்கியிருக்க வேண்டும். இப்போது என்ன நடந்திருக்கிறது என்றால் இவ்வாறான இணைப்பொன்று ஆறாம் ஆண்டு ஆங்கில மொடியூலில் இருப்பதாக அறிந்த உடன் அது மாணவர்களிடம் செல்லாதிருக்க கல்வி அமைச்சு அந்த மொடியூலை விநியோகிக்காமல் அதற்கு முத்திரையிட்டது. ஆனால் அதனை கண்ட அரச எதிர்ப்பாளர்கள் அதனை பகிரங்கப்படுத்தி ஆறாம் ஆண்டு மாணவர்களை மட்டுமன்றி ஏனைய ஆண்டு மாணவர்களும் அதனை தேடும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.
ஆறாம் ஆண்;டு மாணவர்கள் என்றால் சுமார் 11 வயது மாணவர்களாவர். தற்காலத்தில் இந்த வயதில் சிறுவர்கள் இணையத்தளங்களை கையாள தெரிந்தவர்களாவர். அவர்களின் ஆசையை இந்த சர்ச்சை மூலம் தூண்டிவிட்டதன் காரணமாக பொதுவாக பல மாணவர்கள் அதனை தேடி கண்டு பிடித்தும் இருப்பார்கள். அது தான் இந்த சர்ச்சையின் விளைவாகும்.
இந்தப் பிரச்சினை காரணமாக தமது பிள்ளைகள் ஓரினச்சேர்க்கை என்றால் என்ன என்று தம்மிடம் கேட்டதாக சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தொலைக்காட்சி விவாதங்களின் போது கூறினார்கள். அது உண்மை என்றால் அதற்குக் காரணம் சர்ச்சைக்குரிய மொடியூலின் விநியோகத்தை தடுத்து நிறுத்திய ஆளும் கட்சியல்ல, இந்த சர்ச்சையை ஊதிப் பெருக்கியவர்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
இப்போது சர்ச்சை ஓய்ந்துள்ள போதிலும் சம்பந்தப்பட்டட மொடியூலை அச்சிடுவதற்கு செவாகிய தொகையை யாரிடம் அறவிடுவது என்று சில ஆசிரியர் தொழிற்சங்கவாதிகள் வினவியிருந்தனர். இது நியாயமான கேள்வியாகும். ஆயினும் சம்பந்தப்பட்ட ஆங்கில மொடியூலை முற்றாக ஒதுக்கிவிட கல்வி அமைச்சு முடிவு செய்யவில்லை. அதில் உள்ள சர்ச்சைக்குரிய இணைப்பு இருக்கும் பாடத்தை மட்டுமே நீக்கப் போவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அதிலும் பிரச்சினை இல்லாமலில்லை. ஒரு பாடப் புத்தகத்தில் ஒரு பாடத்தை அகற்றினால் அப்புத்தகத்தில் அதற்கு அடுத்ததாக உள்ள பாடங்களினதும் பக்கங்களினதும் எண்களை மாற்ற வேண்டும். அதற்கும் பொது மக்களின் பணமே செலவாகிறது. எனினும் அரச நிறுவனங்களில் ஏற்படும் இது போன்ற நட்டங்களை அறவிடுவதற்கான சட்டங்கள் இருக்கின்றனவா என்பது தெவில்லை.
அவ்வாறான சட்டங்கள் இருந்தால் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களும், நாட்டை வங்குரோத்து நலைக்கு தள்ளியவர்களும் நிச்சமாக அவற்றால் நாடு அடைந்த நட்டத்தை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த இணைப்பை மொடியூலில் புகுத்தியர்களை கண்டு பிடித்து விசாரணை செய்து உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை அரசாங்கம் மக்களுக்கு விளக்காவிட்டால் இதற்கான பொறுப்பபை அரசாங்கமே ஏற்க நேரிடும். அதேவேளை இது தற்செயலாகவும் நடந்திருக்கலாம். அல்லது அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாக்க சில அதிகாரிகள் வேண்டுமென்றே இதனை செய்திருக்கலாம்.
சிலவேளை மற்றொரு இணைப்பை குறிப்பிட்ட இடத்தில் சேர்க்க முற்பட்ட Nபுhது தவறுதலாக இந்த தகாத இணைப்பு புகுத்தப்பட்டு இருக்கலாம். எழுத்து வேலைகள் செய்யும் போது இது போன்ற தவறுககள் இடம்பெறுவது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. குமார் பெர்ன்னம்பலம் சுட்டு கொல்லப்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளியிட்ட இறங்கல் செய்தியில் ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாளே திகதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
மிக எளிதாக தீர்க்கப்படவிருந்த ஒரு பிரச்சினையை அரசியல் காரணங்களுக்காக சிலர் ஊதிப் பெருக்கியதன் விளைவாக இப்போது ஆறாம் ஆண்டு மாணவர்கள் மட்டும் இந்த ஆண்டு பழைய பாடப் புத்தகங்களை பிரயோகிக்க நேர்ந்துள்ளது. இது சிலவேளை அம்மாணவர்கள் அடுத்த ஆண்டு புதிய மொடியூலில் கல்வி கற்க முற்படும் போது அவர்களுக்கு பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம். இது தான் இந்த சர்ச்சையினால் நாடு கண்ட பலனாகும்.
21.01.2026
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026