2026 மே 02, சனிக்கிழமை

அமைச்சர் அதாவுல்லாவின் ஐந்தொகை!

A.P.Mathan   / 2012 மார்ச் 16 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணக்கியலில் ஐந்தொகை என்கிற சமாசாரம் பற்றி நீங்கள் அறிவீர்கள்! நமது வரவு  செலவுகளை எழுதி - இறுதியில் வரவையும் செலவையும் ஐந்தொகையில் சமப்படுத்திக் காட்ட வேண்டும்.

நம்முடைய கணக்கு வழக்குகளின் போது - சிலவேளைகளில், வரவு அதிகமாக இருந்து செலவு குறைவாக இருக்கும். வேறு சில சமயங்களில் வரவினை விடவும் செலவு அதிகமாக இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், தேவைக்கேற்றவாறு மீதி மற்றும் கடன்களால் ஐந்தொகையானது சமன் செய்யப்படும்!

அரசியலிலும் ஐந்தொகைகள் உள்ளன. அவை பல்வேறு வகையானவை! உதாரணமாக, ஒரு கட்சியின் முக்கியஸ்தர்களாகக் கருதப்பட்ட சிலர் திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சி ஒன்றோடு இணைந்து விடுகின்றனர் என வைத்துக் கொள்வோம். முக்கியஸ்தர்களைப் பறிகொடுத்த கட்சிக்கு இது கடுமையான இழப்பாகும். இந்த இழப்பினை, அந்தக் கட்சியினர் ஈடு செய்தே ஆகவேண்டும். இல்லா விட்டால், குறித்த கட்சியின் செல்வாக்குத் தொடர்பில் மக்கள் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்கள். மட்டுமன்றி, முக்கியஸ்தர்களைப் பறிகொடுத்த கட்சிக்கு அந்நிகழ்வானது பாரிய வெட்கக் கேடாகவும் அமைந்து விடும்.

இவ்வாறான இழப்புக்களை அரசியல் கட்சிகள், அநேகமாக ஒரே மாதிரியாகவே ஈடுசெய்ய முயற்சிக்கின்றன. எவ்வாறெனில், பாதிக்கப்பட்ட கட்சியினர், தமது முக்கியஸ்தர்களை பறித்தெடுத்த கட்சியிலுள்ள பிரபல 'தலை'களை அடையாளம் கண்டு, அவர்களை தமது கட்சிக்குள் இழுத்தெடுத்து விடுகின்றனர்.

அதாவது, எனது ஆட்களை உனது கட்சிக்குள் எடுத்தாயல்லவா? இதோபார், உனது ஆட்களை எனது கட்சிக்குள் எடுத்து விடுகிறேன் என்பதே அந்தச் சமப்படுத்தலாகும்.

இந்த அரசியல் ஐந்தொகைகளில் ஏராளமானவை சாதாரண பார்வைக்கு சமப்படுத்தலாகத் தோன்றினாலும், பல சமயங்களில், அவை சமப்படுத்தல்களாகவே இருப்பதில்லை! அரசியல் ஐந்தொகைகளில் அதிகமானவை எண்களால் மட்டுமே சமன்செய்யப்படுகின்றன. பெறுமானங்கள் அங்கு பார்க்கப்படுவதேயில்லை!

எண் என்பதும், பெறுமானம் என்பதும் வேறுவேறானவை. உதாரணமாக, உங்களிடம் இரண்டு நாணயக் குற்றிகள் உள்ளன. என்னிடமும் இரண்டு நாணயக் குற்றிகள் இருக்கின்றன. எனவே, நம்மிடமுள்ள நாணயக் குற்றிகளின் எண்ணிக்கைகள் சமமானவை! ஆனால், உங்களிடம் இருக்கும் இரண்டு நாணயங்களும் - ஒரு ரூபாய் குற்றிகள். என்னிடமுள்ளவையோ ஐந்து ரூபாய்க் குற்றிகள். அப்படியாயின் நாம் வைத்திருக்கும் நாணயக் குற்றிகளின் பெறுமானங்கள் வௌ;வேறானவை – சமனற்றவை!

இந்த உதாரணத்தின்படி, நம்மிடமுள்ள நாணயக் குற்றிகளின் எண்ணிக்கைகள் சமமானவையாக உள்ளபோதும், பெறுமானங்களோ வித்தியாசமானவை! புரிந்து விட்டதா?

சரி - இனி, விடயத்துக்குள் போவோம்!

அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் எனும் கட்சி பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தக் கட்சியானது அதாவுல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றினைத் தளமாகக் கொண்டது. கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை அதாவுல்லாவே வகிக்கின்றார். மேலும், தேசிய காங்கிரஸின் உயர் பதவிகளை வகிப்போரில் முக்கால்வாசிப் பேருக்கும் அதிகமானோர் அக்கரைப்பற்றினைச் சேர்ந்தவர்கள். அந்தவகையில், அக்கரைப்பற்றில் நிகழும் அரசியல் சலனங்களும், சலசலப்புகளும் - ஏதோவொரு வகையில் அமைச்சர் அதாவுல்லாவையும், அவரின் தேசிய காங்கிரஸையும் நிச்சயம் பாதித்தே ஆகும்!

அந்தவகையில், சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் அரசியல் சலசலப்பொன்று இடம்பெற்றது. அதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அந்தக் கட்சியின் நீண்டகால உறுப்பினருமான யூ.எல்.உவைஸ் என்பவர் - அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார். அதுவே அந்த சலசலப்பாகும்!

இந்த உவைஸ் என்பவர் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகவும் இருந்தவர். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதேச சபை, மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று அனைத்திலும் போட்டியிட்டவர்! ஆயினும் அதிகமான தேர்தல்களில் இவர் சந்தித்தவை தோல்விகள்தான். குறிப்பாக 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவர் களமிறங்கிய எல்லாத் தேர்தல்களிலும் படுதோல்விகளையே சந்தித்திருந்தார். சில தேர்தல்களில் இவர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையானது வெறும் 500இற்கும் குறைவானவையாக இருந்தன!

சரி, அப்படியென்றால் - இவ்வாறு தோல்விகளின் முகத்திலேயே முழித்துப் பழகிய, தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை, அமைச்சர் அதாவுல்லா ஏன் தனது கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கின்றீர்களா?

அவ்வாறு நீங்கள் கேட்பீர்களாயின், உங்களுக்கு இது தொடர்பான பின்னணிக் கதையொன்றைக் கூறியே ஆகவேண்டும்!

அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அப்பிரதேச மாநகரசபையின் தற்போதைய உறுப்பினருமான ஏ.எல்.தவம் என்பவரை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இவர் - சில மாதங்களுக்கு முன்னர் வரை, அமைச்சர் அதாவுல்லாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர். தேசிய காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் பதவி வகித்தார். அதாவுல்லா 'எள்' கேட்டால், அடுத்த நிமிடம் இவர் எண்ணெய்யோடு நிற்பார். கிட்டத்தட்ட, அக்கரைப்பற்றில், அதாவுல்லாவின் அரசியலைச் செய்தவர் - இந்த தவம்தான்!

அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளராகப் பதவி வகித்த தவம் - அங்குள்ள மாநகரசபையின் மேயராகவும் தானே வரவேண்டும் எனும் கனவுகளில் இருந்தார்! ஆனால், மாநகரசபைத் தேர்தலில் அமைச்சர் அதாவுல்லா தனது மகனாரைக் களமிறக்கி மேயராக்கியதால், தவத்தின் கனவு சுக்குநூறாகியது. இதனால், அமைச்சர் அதாவுல்லாவுக்கும், தவத்துக்குமிடையே முறுகல் ஏற்பட்டு, கடைசியில், அது - பிளவாக மாறியுள்ளது!

அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் குதிரைச் சின்னத்தில் அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் தவம் போட்டியிட்ட போதும் - அவரால் ஓர் உறுப்பினராக மட்டுமே தெரிவாக முடிந்தது. சட்டப்படி பார்த்தால் இவர் அதாவுல்லாவின் கட்சி சார்பான மாநகரசபை உறுப்பினர். ஆனால், அதாவுல்லாவுக்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவம் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றார். அத்தோடு, அதாவுல்லாவுக்கெதிராக பிரகடனப்படுத்தப்படாத அரசியல் போர் ஒன்றிலும் தவம் குதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, மாற்று அரசியல் கட்சியொன்றில் தவம் இணைந்து கொள்ளப் போவதாகவும், கதைகள் உலவி வருகின்றன. இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில், அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களும் தவமும் சந்தித்துப் பேசியதாக ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்னர் செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது!

தவத்தைப் பொறுத்தவரை, அவர் - அமைச்சர் அதாவுல்லாவின் பலம், பலவீனங்களை மிக அருகிலிருந்து பார்த்தவர். எங்கே அடித்தால் அதாவுல்லாவுக்கு மிகக் கடுமையாக வலிக்கும் என்பதை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொண்டவர். அத்தோடு, அக்கரைப்பற்றில் தவத்துக்கென்று ஓர் ஆதரவாளர் பட்டாளமும் இருக்கிறது. இவைகளையெல்லாம் ஒன்று திரட்டி, தவம் முழுமையாகக் களத்தில் இறங்கினால், அது அதாவுல்லாவின் அரசியலை நிச்சயம் ஏதோவொரு வீதத்தில் பாதித்தேயாகும்!

இவற்றினை அதாவுல்லாவும் நன்கு அறிவார். எனவே, தவத்தின் வெற்றிடத்தை ஏதோவொரு வகையில் நிரப்பிக் காட்ட வேண்டிதொரு கட்டாயம் அமைச்சர் அதாவுல்லாவுக்கு ஏற்பட்டது. அவ்வாறு செய்யாது விட்டால், அவருடைய கட்சி சரிந்து கொண்டு போவதாக ஆதரவாளர்கள் மத்தில் ஓர் எண்ணப்பாடும் உருவாகிவிடும்!

மேலுள்ளவற்றையெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்த பிறகுதான், மு.காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரான உவைஸினை தனது கட்சிக்குள் அதாவுல்லா இணைத்துக் கொண்டார்! அதாவது, தவம் என்கிற நபர் ஒருவரின் இழப்பினை, உவைஸ் என்பவர் மூலமாக அதாவுல்லா சமப்படுத்தியிருக்கின்றார்.

சரியாகக் சொன்னால், நாம் மேலே கூறிய உதாரணத்திற்கிணங்க, அதாவுல்லா தனது ஐந்தொகையினை வெறும் எண்ணிக்கையால் மட்டுமே சமன் செய்துள்ளார். பெறுமானங்களால் அல்ல என்பதை – அக்கரைப்பற்று அரசியல் பற்றி அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்!

அமைச்சர் அதாவுல்லா இழந்தது ஆயிரம் ரூபாய் நாணயம். அந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக அவர் பொறுக்கி எடுத்துக் கொண்டதோ – பழைய காலத்து ஒற்றைச் சதச் செப்புக் குற்றியாகும் என்று, தவத்தின் பிரிவையும், உவைஸின் இணைவையும் சொல்லிச் சிரித்தார் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தரான நமது நண்பர் ஒருவர்!

இதேவேளை, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டவர்களில் ஒருவரான சட்டத்தரணி பஹீஜ் என்பவரும் உவைஸுடன் சேர்ந்து அமைச்சர் அதாவுல்லாவுடன் இணைந்துள்ளார். இப்படி திடுதிப்பென அதாவுல்லாவோடு – தான் இணைந்து கொண்டமைக்கான காரணங்களை பஹீஜ் பட்டியலிட்டுள்ளார். அதில் முக்கியமானது 'அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மாற்று அரசியலை மேற்கொள்வதற்கு இதுவரை மு.காங்கிரஸ் தலைமைத்துவம் எந்தவொரு வியூகத்தினையும் மேற்கொள்ளவில்லை' என்பதாகும்!

ஆனால், சட்டத்துறை சார்ந்த பதவியொன்றைக் குறிவைத்து, அதைப் பெற்றுக் கொள்வதற்காகவே அதாவுல்லாவுடன் பஹீஜ் இணைந்து கொண்டார் என்கின்றது வேறொரு தரப்பு!

எது எப்படியோ, சட்டத்தரணி பஹீஜ் - மு.கா.வை விட்டும் பிரிவதற்கு காரணம் எதுவாக இருந்த போதும், 'அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மாற்று அரசியலை மேற்கொள்வதற்கு மு.காங்கிரஸ் தலைமைத்துவம் இதுவரை எந்தவொரு வியூகத்தினையும் மேற்கொள்ளவில்லை' எனக் கூறப்படும் குற்றச்சாட்டானது அப்பட்டமான உண்மையாகும்!

அக்கரைப்பற்றுப் பிரதேசம் என்பது – மு.காங்கிரஸின் பிரதான அரசியல் பகையாளியான அமைச்சர் அதாவுல்லாவின் தளம் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். உண்மையில் ஓர் எதிரியை வீழ்த்த வேண்டுமாயின் அவரின் பிரதான தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அப்படிப் பார்த்தால், அமைச்சர் அதாவுல்லாவை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்கு, அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் தனது அரசியலை உயிர்ப்பிக்க வேண்டும், பலப்படுத்த வேண்டும்!

ஆனால், மு.காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் துரதிர்ஷ்டவசமாக இதைச் செய்யவேயில்லை. அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள மு.காங்கிரஸ்காரர்களுக்கு எந்தவிதமான உற்சாகப்படுத்தல்களும் மு.கா. தலைமைத்துவத்திடமிருந்து இதுவரை கிடைக்கவேயில்லை. ஆகக்குறைந்தது, மு.காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்றுப் பிரதேச தேர்தல்களில் களமிறங்கியோரைக் கூட, அந்தக் கட்சியின் தலைமைத்துவம் அரவணைத்துச் செல்லவில்லை என்பது – அந்தப் பிரதேசத்து மு.கா. முக்கியஸ்தர்கள் பலரின் ஆதங்கமாகும்!

இந்த உண்மைகளில் நியாயங்கள் இருக்கின்ற போதும், மு.காங்கிரஸின் அக்கரைப்பற்றுப் பிரதேச அமைப்பாளராகவிருந்த உவைஸ் - அதாவுல்லாவுடன் இணைந்து கொண்டமைக்கு இதை ஒரு காரணமாகச் சொல்ல முடியாதென்கிறார் மு.காங்கிரஸின் பிரமுகர் ஒருவர்!

'மு.காங்கிரஸிலுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அபிவிருத்தி வேலைகளுக்கான ஒப்பந்தங்கள், வீசாக்கள், தொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல அனுகூலங்களை - அண்மையில் கூட உவைஸ் பெற்றெடுத்துள்ளார். மு.காங்கிரஸிடமிருந்து ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இவர் நிறையவே வெகுமானங்களைப் பெற்றெடுத்து வந்துள்ளார். இவைகளைச் சுட்டிக்காட்டி மு.காங்கிரஸின் அக்கரைப்பற்று தேர்தல் அலுவலகத்திலிருந்து உவைஸுக்கு ஒரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான ஒருவர் மு.கா.வை விமர்சிப்பதற்கும், உண்மை, நேர்மை, நியாயம், அநியாயங்கள் குறித்தெல்லாம் பேசுவதற்கும், சமூகம் தொடர்பில் அக்கறைப்படுவதற்கும் எந்த வகையிலும் லாயக்கற்றவர் என்று தொடர்ந்து கோபப்பட்டார் மேற்சொன்ன மு.கா. முக்கியஸ்தர்!

கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, நாம் மேலே குறிப்பிட்டவை, குறிப்பிடாதவை என்று அண்மைக் காலமாக அதாவுல்லாவின் அரசியல் கணக்கு வழக்குகளில் செலவுகளே அதிகமாக இடம்பெற்று வருகின்றன. இவற்றினை ஈடுகட்டும் அவசரத்தில் அமைச்சர் அதாவுல்லா தனது ஐந்தொகையின் வரவுப் பக்கத்தில் - கைக்குக் கிடைத்த எண்களையெல்லாம் பொறுக்கிப் போட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

பெறுமானங்களால் சமன் செய்யப்படாத ஐந்தொகைகள் - பரீட்சையில் முட்டைகளையே புள்ளிகளாகப் பெறும் என்பதை - முன்னாள் வாத்தியாரான அமைச்சர் அதாவுல்லா அறியாமல் போனமைதான் இங்கு ஆச்சரியமாகும்!!!
•   


  Comments - 0

  • m.i.m.infas Sunday, 18 March 2012 12:17 AM

    மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை.....அஷ்ரப் நகர் காணி பிரச்சினை பற்றியும் எழுதுங்க. மப்ரூக் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    kamran Saturday, 17 March 2012 04:45 PM

    கொல்லன் தெருவில ஊசி விக்கிறாப்போல!

    Reply : 0       0

    ahamed Saturday, 17 March 2012 05:46 PM

    Mr mafrook do u know the old saying “every cat is drinking milk while closing the eyes and thinking the world becomes dark.” likewise you are trying to fool the idiots of SLMC. Do you know the people who was the real loyal to SLMC was one and only AKKARAIPATTU up to 2004.

    They know what is politics? How to do? What to do? When to do? Where to do? Can you tell one single example that Athaulla failed after leaving SLMC.

    If you don’t mind let your leader the Hon. Rauf Hakeem to join with Athaulla for learning the politic of politics.

    Do you know what Thawam did in South Eastern University? Go and ask every single graduates they will tell you better.

    Reply : 0       0

    zahira college Saturday, 17 March 2012 07:06 PM

    பஹீஜ் கூறியது போல கட்சி சரியான நேரத்துக்கு சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் பஹீஜ் இல்லை இன்னும் எத்தனை பேர் போக இருக்கிறார்கள் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே முஸ்லீம் காங்கிரஸ் தலைமை சரியான தீர்மானத்துடன் காலை முன் வைக்கவும்.

    Reply : 0       0

    Mullah Saturday, 17 March 2012 07:47 PM

    Mr. Ahamed. உங்கள் கருத்தை வரவேற்கிறேன். தற்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலமை அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் வாழ்க்கையை அழிப்பதற்கு எடுத்த முயற்சியில் கடுகளவேனும் முஸ்லிம் காங்கிரஸை வளர்ப்பதற்கோ முஸ்லிம்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கவோ எடுக்கவில்லை என்பது அப்பட்டமான அனைவரும் அறிந்த ரகசியமான உண்மை. அதற்க்காக அமைச்சர் அதாவுல்லா செய்யவதெல்லாம் சரி என்றாகாது.

    Reply : 0       0

    Mullah Saturday, 17 March 2012 07:51 PM

    இவை அனைத்தும் அறிந்த முன்னாள் தவிசாளர் தவம், அதாவுல்லாவுக்கு எதிராக செயல்படுவார், அதில் நாம் குளிர்காயலாம் என மு.கா நினைக்குமாயின் அது அவர்களின் முட்டாள்தனத்தின் முன்னுதாரணமாகும். தவிசாளர் தவமும் அமைச்சர் அதாவுல்லாவும் பிரிந்து செயற்படுவதென்பது ஒட்டு மொத்த அக்கரைப்பற்றுவாழ் முஸ்லிம் மக்களை மட்டுமல்லாது, இனி வரும்காலங்களில் முஸ்லிம்களுக்கு பலமான அரசியல் கட்சி உருவாக்க முடியாது என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்திடும்.

    Reply : 0       0

    Mullah Saturday, 17 March 2012 07:55 PM

    கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள அரசியவாதிகளைப்போல் எடுப்பார் கைப்பிள்ளயாக அரசியல் நடத்தும் நிலமை எங்கள் பிரதேச பிரதிநிதிகளுக்கும் வரும் என்பதை மனதில் கொண்டு செயற்படுவர் என நினைக்கிறேன்.

    Reply : 0       0

    Mullah Saturday, 17 March 2012 07:56 PM

    திரு.மப்றூக் அவர்களே உங்களுக்கே கணக்கியல் தெரியது ஏன் ஐந்தொகை கற்பிக்கும் வேலை. நீங்கள் சிறந்த ஊடகவியலாளனெனின் அந்த வேலையை நீங்கள் திறம்பட செய்யுங்கள். இல்லையெனின் மு.கா போராளியாக அல்லது தொண்டனாக இருந்து உங்கள் வேலையை செய்யுங்கள். வீடு இரண்டுபட கொண்டாடும் கூத்தாடியாகாதீர்கள்.

    Reply : 0       0

    kuru Saturday, 17 March 2012 08:15 PM

    எம் முன்னோர்கள் சொன்னார்கள். ஒருகாலம்வரும், அக்காலத்தில் குளம் ஒன்றில் ஒரு அம்மிக்கல்லையும், ஒரு அரசிலை ஒன்றையும் நீரில் இட்டால் அம்மிக்கல் மிதக்கும்-அக்காலமல்லவா இது......

    Reply : 0       0

    Nanpan... Saturday, 17 March 2012 09:35 PM

    முல்லா அவர்களே நீங்கள் நீங்கள் கூறுவதை பார்த்தால் முஸ்லிம்களின் அரசியல் அதா.. தவம்.. ஆகியோரின் கையிலேதான் தங்கயுள்ளது போல தோன்றுகிறது.
    நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவமோ..அதா..வோ அக்கரைப்பற்றில் மட்டும்தான் அவர்களின் குதிரையினை ஓட்ட முடியும்..

    Reply : 0       0

    Mullah Saturday, 17 March 2012 10:08 PM

    நண்பா; அதாவும், தவமும் அக்கரைப்பற்றில் குதிரை ஓட்டினாலும் அக்கரைப்பற்று முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையாவது ஓரளவுக்கு வெண்றெடுத்தனர்..

    Reply : 0       0

    Dr;ANAS Saturday, 17 March 2012 10:29 PM

    attaullah's the secret of success is thavam. Akkaraipattu people know that but they can not accept it.

    Reply : 0       0

    rani Saturday, 17 March 2012 11:00 PM

    உண்மை ; காலம் முடியும் போது வீடு செல்லத்தான் வேண்டும்.

    Reply : 0       0

    siraan Saturday, 17 March 2012 04:44 PM

    உங்கட ஐந்தொகை கணக்கை சிராஜ்- காரியப்பர் விடயத்தில் போட்டுப்பார்த்தால் தலைவரின் வணிகம் கல்முனை- சாய்ந்தமருது அரசியலில் நன்றாஹப் புரியும்!

    Reply : 0       0

    m.i.m.infas Sunday, 18 March 2012 12:18 AM

    மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை.....அஷ்ரப் நகர் காணி பிரச்சினை பற்றியும் எழுதுங்க.மப்ரூக் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    SLMF Sunday, 18 March 2012 12:19 AM

    மப்ரூக் ஒரு பக்க சார்பாக எழுதி உள்ளார் என்பது மட்டும் உண்மை...
    அதாஉல்லாஹ் மென்மேலும் வாழ்க.

    Reply : 0       0

    m.i.m.infas Sunday, 18 March 2012 12:28 AM

    உவைஸ் போனதால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பு ஒன்றும் வராது... ஆனால் காங்கிரஸ் தலைமைத்துவத்திலும் நிறைய பலவீனங்கள் உள்ளது... வாழ்த்துக்கள் மப்ரூக். அப்படியே சூறையாடபடும் கிழக்கு காணிகள் பற்றி நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும் சுட்டி காட்டுங்கள்.

    Reply : 0       0

    Mullah Sunday, 18 March 2012 04:10 AM

    திரு. யூ. எல் உவைஸ் செல்லாக்காசு என்று திரு.மப்றூக் சொல்கிறார். ஆகவே அவர் இழப்பு பெரிதில்ல என்றால் இவ்வளவு பெரிய கட்டுரை எதற்கு?

    Reply : 0       0

    AKP Sunday, 18 March 2012 04:25 AM

    @ Dr.Anas....
    Politic is not a Medicine....its jst a Game....if u have strategy u ll be a winner.......,
    Do u know the Political movment of Mr.Thavam....?

    Reply : 0       0

    KS Sunday, 18 March 2012 04:35 PM

    கடந்த 8 வருடங்களில் அதவுல்லாவின் கோட்டைக்குள் உவைஸ் எனும் தனி மனிதன் எதிர்த்து நின்று அரசியல் செய்தவர் பேச்சாற்றல் மிக்கவர் ஆளுமை மிக்கவர். அரசியல் லாபம் பெறுவதாயின் எப்போதோ அதவுல்லாவுடன் சேர்ந்து இன்று பெரிய பதவியில் இருக்கலாம். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் சில பிரிவினர் உவைஸை ஓரம் கட்ட மேற்கொண்ட செயற்பாட்டின் பின்னணியில் உவைஸ் சுதாகரித்து கொண்டார். மற்ற படிக்கு அதாவுல்லா இழுத்து எடுக்க எந்த அவசியமும் தற்போதைய சூழலில் இல்லை...

    Reply : 0       0

    AKP Monday, 19 March 2012 06:30 AM

    கருத்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது ..........காணவில்லை ....
    மாப்றுக் ........ நீங்க எப்பிடித்தான் எழுதினாலும் ஒண்டும் நடக்காது ....... Athaullah ஆடத்தெரிந்தவர் , எல்லா மேடைகளிலும் அவரால் ஆடமுடியும் ....

    Reply : 0       0

    niyas Monday, 19 March 2012 08:00 AM

    மப்றூக் மிகவும் சரியாகவே கணிப்பிட்டிருக்கிறீர்கள்.
    ஆனால், இங்கு சொல்வதைப்போல வெளிப்பார்வையில் அதாஉல்லா எந்தச் சூழலையும் வெற்றுகொள்ளக் கூடியவர்போல தென்படலாம்.
    அது ஒருவகையில் உண்மையும்கூட. அந்த உண்மை தவம் இவரோடு சேர்ந்த பின்னரே உருவானது.
    தவம் அதாஉல்லாவோடு இணைவதற்கு முன் அக்கரைப்பற்றில் அதாஉல்லாவுக்கு ஆதரவு இருக்கவில்லை.சேகு இஸ்ஸதீனுக்குத்தான் இருந்தது.
    தவம் பிரிந்த பின் இன்னும் அதாஉல்லா ஒரு தேர்தலையும் சந்திக்கவில்லை.
    அதன் பின்னர்தான் எல்லாம் தெரியவரும்.
    ஆனால், அதாஉல்லா அவர்களுக்கும் தெரியும் தவத்தை எதிர்கொள்வது இலகுவான விசயமில்லை என்று. நானும் அக்கரப்பத்துத்தான்.

    Reply : 0       0

    Rusaith Monday, 19 March 2012 06:01 PM

    மப்ரூக் சொன்னது. சரி தான். aanaal yarulum eppothum vella mudiayathu.

    Reply : 0       0

    roshan Tuesday, 20 March 2012 02:58 PM

    there are inexcusable faults in bothe the parties. Rauf Hakeem was not concentrating to the expected level while Atahulla made divisions among people
    of adjoining villages. Atahulla being an able politician would have gained much more had he looked after other cities in the eastern province at least to a certain extent. People are willing to live united and the politicians are palnning to divide.

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 20 March 2012 04:52 PM

    ஆடுபவர் மக்களுக்கு தேவை இல்லை, மக்களை ஆட வைப்பவர்தான் தேவை... சகோதரர் மப்றூக் அவர்கள் நீண்ட கட்டுரையை சில விளங்கா மணிகளுக்காக விபரமாக எழுதியிருக்கிறார் ஆனால் அவர் ஒரு கட்சி சார்பாக எதுவும் இங்கே கூறவில்லை நல்லா படியுங்கள் அல்லது படிக்கும் போது கேளுங்கள்

    Reply : 0       0

    janoovar Friday, 16 March 2012 10:51 PM

    நினைத்தேன் இறுதியில் மப்றூக் இதனைத்ததான் எழுதுவார் என்று

    Reply : 0       0

    Najeem Friday, 16 March 2012 07:28 PM

    சூப்பர் கட்டுரை.... தொடர்ந்து எழுதுங்க

    Reply : 0       0

    razeek karungkoditheevu Friday, 16 March 2012 07:34 PM

    இவ்வாறான ஒருவர் மு.கா.வை விமர்சிப்பதற்கும், உண்மை, நேர்மை, நியாயம், அநியாயங்கள் குறித்தெல்லாம் பேசுவதற்கும், சமூகம் தொடர்பில் அக்கறைப்படுவதற்கும் எந்த வகையிலும் லாயக்கறவர் இவரைப்போல் இன்னும் ஓரிருவர் உள்ளனர் அவர்களையும் மு கா விலிருந்து வெளியேற்ற வேண்டும். அப்பதான் கட்சி உருப்படும்.

    Reply : 0       0

    addalaicheni+1 Friday, 16 March 2012 07:48 PM

    இதே தவம் அதவுல்லாவுடன் இருக்கும் போது செப்புச்சல்லிக்கும் பெறுமதி இல்லாதவர். ஆனால் எதிரானதும் அவர் எங்கேயோ இருக்கிறார். அலசல் என்பது உண்மைத்தன்மைகளின் அடிப்படையிலானது. சரி உவைசை இவ்வளவு நாளும் அவங்க வைத்திருந்தது குறித்து ஏன் அலசவில்லை....... இது கொஞ்சம் ஓவராக்கும்.

    Reply : 0       0

    நண்பன் Friday, 16 March 2012 07:51 PM

    சகோதரர் தவம் போன்ற தைரியமான அரசியல்வாதிகள் அமைச்சர றிசாத் பதியுதீனின் கட்சியில் இருந்தால்... எப்படி பணி செய்யலாம்.. தாமதிக்க வேண்டாம் தவம்... அரசியல் என்பது மக்களுக்காகத் தானே மக்கள் பிரதிநிதிக்கு மதிப்பிள்ளையென்றால் எதற்கு அரசியல்.. மப்றுக் நானா நிறுவினால் சரியாக இருக்கும்.

    Reply : 0       0

    Dr.M.Inamullah PhD Friday, 16 March 2012 07:53 PM

    செப்புக்கசுகளை ஏற்கனவே தங்கக் காசுகளாக மாற்றிக் காட்டிய அதாவுல்லாஹ்.. விஷயமில்லாமல் எதையும் விலை கொடுத்து வாங்க மாட்டார்... என்பது மட்டும் உண்மை.. ஆனால் தங்கக் காசுகளை கையிலெடுத்து சிலர் செப்புக் காசுகளாக மாற்றிக் கொண்டிருப்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்...! அவுங்களுக்கு ஜெனீவாவுல வேற அலுவலாம்..!

    Reply : 0       0

    Sanoon Mohideen Friday, 16 March 2012 08:05 PM

    நம்ம mayor அந்தப் பக்கம் போவாரு என்கிறீங்களா ???? ம்ம்...... பார்க்கலாம்.... ஆனாலும் எனக்கெண்டா நம்பிக்கை இல்ல...

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 16 March 2012 08:10 PM

    சரியான முறையில் ஆராய்ந்து சிறப்புக்கட்டுரை கொடுத்திருக்கும் சகோதரர் மப்றூக் அவர்களுக்கு முதல்ல நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து விட்டு.
    இங்கே அதவுல்லாவின் ஐந்தொகை என்ற கட்டுரை உண்மையில் அவருக்கு சரியானதாகவே இருக்கிறது ஏன்னா அதா வின் கட்சி அக்கரைப்பற்றுக்கு மாத்திரம்தான் இப்ப செயற்பாட்டில் உள்ளது இதற்க்கு உதாரணம் பக்கதில் உள்ள அட்டாளைச்சேனையும் தமிழ் ஊரும் எடுத்துக்காட்டு (லைட் விளக்கத்தில்) உவைஸ் என்னும் தனி நபரின் மாற்றம் முஸ்லீம் காங்கிரசிக்கு எந்த பாதிப்பையும் கொடுக்காது ஆனால் சட்டத்தரணி பஹீ

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 16 March 2012 08:11 PM

    பஹீஜ் கூறியது போல கட்சி சரியான நேரத்துக்கு சரியான முடிவு எடுக்க வில்லை என்றால் பஹீஜ் இல்லை இன்னும் எத்தனை பேர் போக இருக்கிறார்கள் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே முஸ்லீம் காங்கிரஸ் தலைமை சரியான தீர்மானத்துடன் காலை முன் வைக்கவும் .

    Reply : 0       0

    Alifar Friday, 16 March 2012 09:45 PM

    Everything is ok. But, this article clarifies the balance sheet (கணக்கியலில் ஐந்தொகை என்கிற சமாசாரம் பற்றி நீங்கள் அறிவீர்கள்! நமது வரவு செலவுகளை எழுதி - இறுதியில் வரவையும் செலவையும் ஐந்தொகையில் சமப்படுத்திக் காட்ட வேண்டும்)
    . It is wrong. even one cent/1 crore is expense or receipt, if anyone is proper controller(Ataullah), trail balance should be tallied arithmatically with credit and debit. So, we can construct the balnce sheet precisely. So, the article writer is trying to say about "Income Statement" only. But, he should talk about value of fixed asset(Thavam & Uwais) with more economic useful time.

    Reply : 0       0

    ashraff Friday, 16 March 2012 10:20 PM

    அரசியல் அலசல் தற்காலத்தில் வீணான ஒன்று. நாடு பற்றி எரியும் போது அபிவிருத்தி பற்றிப்பேசுவது போல. இருப்பினும் கட்டுரையாளர் மப்ரூகை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை

    Reply : 0       0

    jaseem Friday, 16 March 2012 10:50 PM

    நல்லதொரு அலசல் மட்டுமல்ல உண்மைகளும் உள்ளன.... உவைஸ் நீங்கள் அதாவுடன் பேசுவதென்றால் ஆஹிர் தான் உதவி புரிய வேண்டும்....

    Reply : 0       0

    கல்முனைமகன் Friday, 16 March 2012 07:14 PM

    மப்ருக்கின் அலசல் ஆணித்தரமான உண்மைகள்.
    அதா சார் உங்களது ஐந்தொகையை நிவர்த்திக்கக்கூடிய சரியான காய் எங்கட மேயர் முயச்சித்து பாருங்கள்.

    Reply : 0       0

    Youths Friday, 16 March 2012 11:59 PM

    அன்புள்ள சகோதரர்களே ஒண்டும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வது மேல். இன்டர்நெட் இல் தமிழ் மிர்ரர் பார்க்கும் எத்தன பேருக்கு இல்லாதவங்க இங்க படுற கஷ்டம் விளங்குது...? எண்டே அலசலில நீங்க எல்லாரும் மனசுல ஏதோவொரு சுயநல நோக்கொட இந்த அரசியல் வாதிகளை பார்கிறது தெரியுது. மக்களுக்கு நல்லது செய்றவங்கள பாராட்டுங்க அல்லது சும்மா இரிங்க.

    Reply : 0       0

    ibnuaboo Saturday, 17 March 2012 12:35 AM

    எந்த கணக்கு போட்டாலும் அதாஉல்லா அமைச்சர் போடும் கணக்குகள் லாபத்தில் தாம் முடியும். அவர் சாதாரணத்தில் இருந்து கணக்குபோட்டுதான் இன்று எட்டமுடியாத உயரத்தில் உள்ளார். சந்தர்ப்பத்திற்கு என்ன கணக்கு போடவேண்டுமென அனுமானித்து தப்பாத கணக்கு போடுவதில் சமர்த்தர். இருந்து பாருங்கள் காலம் அவருக்கு சாதகமான PATHILKALAI SOLLUM.

    Reply : 0       0

    Nazeer Saturday, 17 March 2012 01:39 AM

    உங்கள் அலசல் நன்றாகவும் , இரசிக்கும்படியாகவும் உள்ளது. ஆயினும், உங்கள் உதாரணம் பிழை என்று நினைக்கிறேன். இலாப , நட்டக் கணக்கிற்கும், ஐந்தொகைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை கணக்கியல் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் தெரிந்து கொண்டால் நல்லதென்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

    Reply : 0       0

    nowfer Saturday, 17 March 2012 02:24 AM

    கட்டுரை நன்றாக உள்ளது. நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். மக்கள் மாட்டு மந்தைகள் மேய்ப்பவர் சொல்வதை கேட்கும் அதேபோன்று இதில் குறிப்பிட்டவர்கள் மேய்கிறார்கள்.

    Reply : 0       0

    easternbrother Saturday, 17 March 2012 02:52 AM

    மிக விரைவில் இன்சாஹ் அல்லாஹ் , அக்கரைப்பற்றில் இருந்து ஒரு நீதி நேர்மை இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு அமைய ஒரு புது அரசியல் கட்சி தேவை........ அக்கரைப்பற்றில் நல்ல சிந்தனை உள்ள நேர்மையே ரத்தத்தில் ஊறி உள்ள பல ஒழுக்கமுள்ளவர்கள் உள்ளனர்... முன் வருவார்களா? அக்கரைப்பற்று மக்களே இறைவனிடம் கேளுங்கள்..... அவன் உருவாக்குவான்..... இது ஒன்றே வெற்றி..

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 17 March 2012 03:15 AM

    எந்த கணக்கு போட்டாலும் வெற்றிதான். ஏன் என்பது எங்களுக்குத்தானே தெரியும்.
    சும்மா பாய்ந்து போகாம நின்று பாருங்கப்பா என்ன நடக்குது என்று.

    Reply : 0       0

    Abu Saudh Saturday, 17 March 2012 08:33 AM

    ஊருக்கு அமைச்சர் தேவை. அதற்காக அவர் போடும் ஐந்தொகை எல்லாம் சமப்படுத்த முடியாது.

    Reply : 0       0

    naleem Saturday, 17 March 2012 10:49 AM

    சட்டப்படி புட்டு புட்டா வச்சிடீங்க மப்ரூக் ///////////வாழ்த்துக்கள் ....
    -நளீம் (பொத்துவில்)

    Reply : 0       0

    m.i.samsudeen Saturday, 17 March 2012 12:26 PM

    ஐந்தொகை எவ்வாறு அமைந்தாலும் அதவுல்லாவின் பரீட்சை மீதி தொடர்ந்தும் சரியான கணக்காகவே அமைந்து வருவதை மப்ரூக் புரியாமல் இருப்பது கவலை. வரவும் செலவும் சமப்படுத்தப் படாவிட்டாலும் பரீட்சை மீதி அல்லவா இறுதியில் கணக்கை சமப்படுத்துகிறது. அதில் அதாவுல்லாவை மிஞ்ச எந்த மாகாணம் இல்லை என்பதை கடந்த காலத்தில் நிருபித்திருக்கின்றார்.

    Reply : 0       0

    aranejjen Saturday, 17 March 2012 03:12 PM

    இலங்கையின் தேசிய அரசியலில் முஸ்லிம்களின் அரசியல் தற்பொழுது குரங்கின் கையில் அகப்பட்ட புமாலையாய் போய்விட்டது. தங்களது சுயத்திற்காய் சமூகத்தை பலியாக்கின்றனர் - மப்றூக் தொடர்ந்து எழுதுங்கள்.

    Reply : 0       0

    Shm Ajwath Saturday, 17 March 2012 04:43 PM

    அதாவுல்லா தனது ஐந்தொகையினை வெறும் எண்ணிக்கையால் மட்டுமே சமன் செய்துள்ளார். பெறுமானங்களால் அல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .