A.P.Mathan / 2012 மே 21 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
"தேர்தல் வரும் பின்னே, பிரசாரம் வரும் முன்னே" என்பதுதான் இப்போது ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா கையிலெடுத்து இருக்கும் ஆயுதம். இந்திய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று முதலில் கோரிக்கை எழுப்பினார் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் சங்மா. அவர் இருக்கும் சரத்பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், அவருக்கு முதலில் ஆதரவு குரல் எழுப்பியது ஒடிஸ்ஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குரலை ஒலித்திருக்க வேண்டும் என்பது, சமீபத்தில் அவர் சென்னை வந்து ஒடிஸ்ஸாவின் 76ஆவது ஆண்டு விழாவினை சிறப்பாக நடத்திவிட்டு, தமிழக முதல்வரையும் சந்தித்து விட்டுச் சென்ற பின்னணியிலிருந்து தெரிய வருகிறது. நவீன் பட்நாயக் சொன்னவுடன் அதை அதிக சிரத்தையுடன் முன்னின்று சங்மாவுக்கு வாக்களியுங்கள் என்ற பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
3 hours ago
4 hours ago
5 hours ago
Vimalanaathan G Uday Friday, 25 May 2012 05:20 AM
கட்டுரை எதார்த்தமாக உள்ளது. அரசியல் களத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் ஜெயலலிதா எப்போதுமே முன்னிலை வகிப்பவர். ரிசல்ட் நெகட்டிவ் ஆனாலும் அது தன்னுடைய ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை என்பதால் ஜீரோ % முதலீட்டில் களம் இறங்கியுள்ள அம்மாவின், பிரதமர் பதவி ஆசைக்கு பாஜக உள்ளிட்ட வட இந்தியர்கள் துணை போவார்களா என்பது சந்தேகமே...
-விமல் உடையார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago