A.P.Mathan / 2012 ஜூலை 02 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அங்கிருந்து கிளம்பி சென்னை சி.ஐ.டி. கொலனியில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு வந்தார் பிரணாப் முகர்ஜி. அங்கு அவரை அழைத்து வந்தவர் தி.மு.க.வின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு. அவர் வரும்போது சாலையின் இரு புறங்களிலும் பூக்கள் நிரம்பிய தட்டுக்களில் விளக்குகளுடன் நின்று பெண்கள் வரவேற்றது பிரணாப்பிற்கு வித்தியாசமான காட்சியாக இருந்திருக்கும். அதற்கும் மேல் "பெங்கால் மேளம்", "கேரள செண்டை மேளம்", "தமிழக மேளதாளம்" என்று வித்தியாசமான மேளம் வரவேற்பு அப்பகுதியை சற்று நேரம் திருவிழாக் கோலத்தில் மூழ்கடித்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரணாப் முகர்ஜி பத்திரிகை நிருபர்களிடம், "தி.மு.க. தலைவர் கருணாநிதி எனக்கு 1970ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே நன்கு பழக்கமுள்ளவர் என்பதால் அவரை சந்திக்க இங்கு வந்துள்ளேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் அவர் உழைத்து வருகிறார். முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகிய இரண்டிலும் சிறந்த நிலையான தோழமைக் கட்சியாக தி.மு.க. இருந்து வருகிறது" என்று தி.மு.க.விற்கு புகழாரம் சூட்டினார். தி.மு.க. ஆதரிக்கும் அமைச்சரவையில் இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவி பொறுப்பேற்கும் முன்பு தி.மு.க. தலைவருக்கு வாசித்து அளித்த பாராட்டுப் பத்திரமாக இது இருக்கும். பொதுவாகவே மத்திய அரசுக்கு நிலையான ஆதரவு அளித்து வரும் கட்சி தி.மு.க. என்ற இமேஜ் தங்களுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர் தி.மு.க. தலைவர். அதற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்த பிரணாப் பாராட்டு எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணிக்கு பெரிதும் அக்கட்சிக்கு உதவும். காங்கிரஸுடன் கூட்டணியை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்தாலும் சரி, பிரிந்தாலும் சரி இந்த பாராட்டுரை தி.மு.க. விற்கு பேருதவி அளிக்கும்.15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025