2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல்

Editorial   / 2022 டிசெம்பர் 11 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது.

கையிருப்பு குறைந்துவிட்டது. கஜானா முற்றாக காலியாகிவிட்டது. கையேந்தும் நிலையை விடவும் மாற்று வழிகளே இல்லை, இன்றேல் நாளுக்கு நாள் பணத்தை அச்சடிக்கவேண்டும். அந்தளவுக்கு பொருளாதாரம் ஆட்டங்கண்டுக்கொண்டிருக்கின்றது.

சர்வதேச நாண நிதியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இலங்கை, நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. அதற்காக சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது.

விலை அதிகரிப்புகளும் வரி அதிகரிப்புகளுக்கும் குறைவே இல்லை. மக்கள் தலைநிமிர்ந்து வாழமுடியாத அளவுக்கு விலையேற்றம் அதிகரித்துவிட்டது. இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் மின்சாரக்கட்டணமும் மீண்டும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏககாலத்தில் மின்வெட்டும் அமுல்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அகதிகமாகும்.

இலங்கை ரூபாயில் 5,000 தாளொன்றை வெளியில் எடுத்தால் என்ன? நடந்தது என்று யூகிக்கக்கூட முடியாதுள்ளது. அந்தளவுக்கு விலையேற்றம் தலைவிரித்தாடுகின்றது. ஏனைய நாடுகளின் தாள்களை கண்களில் காண்பதே அரிதாகும்.

இந்நிலையில்தான், 10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை இது வழங்கும் என்றும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

இலங்கையர்கள் இந்திய ரூபாயை வேறொரு நாட்டின் நாணயமாக மாற்ற முடியும் என்றும் அதற்காக இலங்கையின் வர்த்தக வங்கிகள், இந்தியாவின் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையின் வங்கிகள், வெளிநாட்டு நாணயத்தை இந்திய வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளான இந்திய நாஸ்ட்ரோ கணக்குகளை திறக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து கணக்கு பரிவர்த்தனைகளும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் வங்கிச் சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி அளித்த போதிலும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த செயற்பாடானது ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயின் பெறுமதியை வலுவாக்கவும், ஐக்கிய அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க குறித்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதனை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதியழித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை வழங்கும் எனவும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைய நாட்டவர்களுக்கிடையிலான வங்கி பரிவர்த்தனைகள் ,சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி அளித்த போதும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய ரூபாயை  இலங்கையின் நாணயமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தோன்றுவதாக  பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 அரசாங்கத் தலைவர்கள் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி நாட்டை இந்தியாவிடம் பணயக்கைதிகளாக இழுத்துச் செல்வதாகவும்  அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். 

 அத்துடன் நாட்டின்  தேசிய வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு விற்று இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றும் மனநிலையில் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு குழு தொடர்ந்தும் நாட்டில் ஆட்சியமைப்பது ஆபத்தானது எனவும், உடனடியாக சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும்    விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருளை விநியோகிக்க வந்தாலும் அவர்களின் சொந்த செலவில் இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வர முடியாது எனவும்   விமல் வீரவன்ச   தெரிவித்துள்ளார். 

அதேசமயம் எதிர்காலத்தில் சுமார் பத்து மணித்தியால மின்வெட்டு ஏற்பட்டால் அரசாங்கத்தினால் தனியாக மின்சாரம் வழங்க முடியாது எனவும் அதனை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் எனவும்  விமல் வீரவன்ச கூறினார்.

அரசாங்கம் கடந்த 20 மாதங்களில் 125,747 கோடி ரூபாக்கு மேல் அச்சடித்துள்ளது  வரையறையின்றி பணம் அச்சிடப்பட்டுள்ளமையால் பாரிய நிதி நெருக்கடிக்குள் இலங்கையை தள்ளியுள்ளது 

சர்வதேச நாணய நிதியம் போன்ற அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் ஊடாக உதவிகளைப் பெறாமல், அரச சொத்துக்களை விற்பது, தமது நண்பர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கி திறைசேறியை வெறுமையாக்குதல் போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் பாதாளத்திலேயே விழும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய, 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கை மத்திய வங்கியிடமிருற்த அரசாங்க திறைசேறியின் கணக்கு மற்றம் திறைசேறி பிணைமுறியின் மதிப்பு 74.74 பில்லியன் ரூபாயாகும். அது 2021 செப்டம்பர் மாதம் நேற்று (30) வரை 1,3332.21 பில்லியன்களாகியுள்ளன.20 மாதங்களுக்கு அச்சிடப்பட்டுள்ள நிதி 1,257.47 பில்லியனாகும்.

அஜித் நிவ்ராட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், இதுவரை 4,784 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் பணமானது மத்தள விமான நிலையத்தை அமைப்பதற்கு செலவான நிதிக்கு அண்மித்த தொகை என்றார்.

2019ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தனவந்த வர்த்தகர்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்தின் வருமானம் பாரியளவு வீழ்ச்சியடைந்து தற்போதைய நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

தனவந்தர்களுக்கு வரி நிவாரணத்தை வழங்கியதால் ஏற்பட்ட வருமான இழப்பை அடைத்துக்கொள்ள நாட்டின் டொலர் இருப்பை கடன் செலுத்த பயன்படுத்தியுள்ளனர். டொலர் இருப்பு இழக்கப்பட்டதால் எரிபொருள் இறக்குமதிக்காக டொலர் செலுத்துவதை கட்டுப்படுத்தியுள்ளது.

டொலர் இழப்புக்கு பரிகாரமாக உரம், மருந்து, உணவுப் பொருள்கள், இலத்திரணியல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளின் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கத்துக்கு நேர்ந்துள்ளது. அதன் பலனாக இன்று நாடு முழுவதும் வரிசைகளை காணக் கூடியதாகவுள்ளது என்றார்.

பொருளாதார நெருக்கடியால் நடந்த போராட்டங்கள் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியபின் பதவியேற்ற ரணில் தற்போதைய சிக்கல்களுக்கு என்ன தீர்வைத் தரப்போகிறார் என்று இலங்கை மட்டுமல்லாது உலகமே எதிர்நோக்கியுள்ள சூழலில் இவ்வாறு கூறியுள்ளார்.

''விருப்பமில்லாமலேனும் இந்த நிலையில் பணத்தை அச்சிட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அரச ஊழியர்களின் இந்த மாதத்திற்கான சம்பளத்தை செலுத்துவதற்காகவும், அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செலவிட வேண்டியுள்ளமைக்காகவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது,'' என்று கூறியுள்ளார்.

அப்படியானால், ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பில் கூறியுள்ளத்தைப் போல அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டின் நாணயத்தை (கரன்சி) அச்சிடுவதன் மூலம் ஏன் தங்கள் பிரச்னைகளையும், மக்களின் பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்ளக் கூடாது?

 

''பணம் அச்சிடுகின்றமையினால், ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்," என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதே அந்த பதில்.

அதாவது அளவுக்கும் அதிகமாக ஒரு நாடு தனது பணத்தை அச்சிடுகிறது என்றால் அந்த பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும். வீழ்ச்சி என்றால் நாணய மதிப்பில் உண்டாகும் வழக்கமான சரிவல்ல. இந்த சரிவு ஏன் உண்டாகிறது என்று பாப்போம்.

ஒரு பொருளை வாங்க வேண்டும் அல்லது ஒரு சேவையைப் பெற வேண்டும் என்றால் அந்தப் பொருளையோ சேவையையோ பெறுபவர் அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டும். அதுதான் அதன் 'விலை' என்று கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருளின் உள்ளடக்க விலை (தயாரிப்புச் செலவு), சந்தையில் அதற்கு இருக்கும் தட்டுப்பாடு, வேறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அதே பொருளின் விலை, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன், அரசு விதிக்கும் வரி, சந்தைப்படுத்தலுக்கு உள்ளாகும் செலவு உள்ளிட்ட பல காரணிகள் அந்த விலையை நிர்ணயிக்கின்றன.

ஒரு வேளை பணம் அச்சடிக்கப்பட்டு எல்லோருக்கும் வழக்கப்படுகிறது என்றால், சந்தையில் இருக்கும் பொருட்கள் அல்லது சேவைகள் ஆகியவற்றைப் பெற எல்லோரிடத்திலும் பணம் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் கொடுக்கும் அளவுக்கு அந்தப் பொருள் இருக்காது. அதாவது சந்தையில் அதன் தட்டுப்பாடு அதிகரிக்கும்.

இப்போது அந்தக் குறிப்பிட்ட பொருளை வாங்க விரும்புவோரில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். எல்லோரிடத்திலும் பணம் இருக்கிறது என்பதால் எல்லோருமே இப்போது அதிகமான பணத்தைக் கொடுக்க முன்வருவார்கள். ஒருவரைவிட ஒருவர் அதிகம் பண கொடுத்து வாங்க முயல்கிறார், அவரைவிட இன்னொருவர் அதிகம் பணம் தர முயல்கிறார், மற்றோருவர் இன்னும் கூடுதலாகப் பணம் கொடுக்க முயல்கிறார் என்றால் அப்பொருளின் விலை அதிகரித்துக்கொண்டே போகும்.

இறுதியாக யாரிடத்திலும் மேலதிக பணம் இல்லை எனும் சூழல் வரும்போது அப்பொருளின் விலை பன்மடங்கு அதிகரித்திருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் வழக்கமான பணப்புழக்கம் இருந்த நேரத்தில், ஒரு கிலோ அரசியை 50 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

பணம் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்தபின் அதன் விலை 100 ரூபாயாகவோ, 500 ரூபாயாவோ, ஏன் 5,000 ரூபாயாகவோ கூட உயர்ந்திருக்கலாம். முன்னர் நீங்கள் ஒரு விலை கொடுத்து எவ்வளவு அரிசி வாங்கினீர்களோ, இப்போது அதே அளவு அரிசியை வாங்க கூடுதலாக விலை கொடுக்க வேண்டி உள்ளது. இதை வேறு சொற்களில் சொல்வதானால், பணத்துக்கு மதிப்பு குறைந்துவிட்டதால் கூடுதலான பணத்தை அதே ஒரு கிலோ அரிசிக்குச் செலவிடுகிறீர்கள்.

இந்த விலை உயர்வுதான் பொருளாதாரத்தில் 'பணவீக்கம்' என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, மத்திய வங்கியிடம் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல ) இருக்கும் அந்நியச் செலாவணி (foreign exchange), தங்கம், வெள்ளி போன்றவற்றின் கையிருப்பு (bullions), பற்று வரவு சமநிலை (ஒரு நாடு வெளிநாடுகளுக்கு செலுத்தவேண்டிய பணத்துக்கும் வெளிநாடுகள் அதற்கு செலுத்தவேண்டிய பணத்துக்கும் இடையிலான வேறுபாடு - இதை ஆங்கிலத்தில் 'Balance of Payments' என்கிறார்கள்) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வளவு பணத்தை அச்சிடுவது என்பதை ஒவ்வொரு நாடும் முடிவு செய்யும்.

ஆனால், புதிய பணவியல் கோட்பாட்டில் மேற்கண்ட காரணிகள் பரிசீலிக்கப்படுவதில்லை. அரசு தாம் விரும்பும் அளவு பணத்தை அச்சிட்டுக்கொண்டாலும் பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்தக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த கோட்பாட்டை பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் ஏற்பதில்லை.

இந்திய ரூபாய் இலங்கையில் புழக்கத்தில் விடப்படுமாயின், இந்திய நிறுவனங்களுக்கு அது வாய்ப்பாக அமைந்துவிடும். எனினும், இலங்கையின் பொருட்களுக்கும், இலங்கையின் ரூபாய்க்கும் எவ்விதமான மதிப்பும் மரியாதையும் கிடைக்காது.

ஆக மொத்தத்தில் இலங்கையின் காசு செல்லாக்காசாகி விடும் என்பது மட்டுமே உண்மையாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X