2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஃபுடிங் விகாரைக்கு பாலித கொஹொன விஜயம்

Freelancer   / 2021 நவம்பர் 20 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 பில்லியன் யுவான் செலவில் புத்தரின் மண்டை ஓட்டு எலும்பை வைப்பதற்காக 2012 - 2015 வரை நிர்மாணிக்கப்பட்ட கண்கவர் யுனிசா அரண்மனை (ஃபுடிங்) விகாரையைப் பார்வையிடுவதற்காக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன விஜயம் செய்திருந்தார் என்று பீஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

தொல்பொருள் பதிவுகளுக்கு அமைய, இந்த நினைவுச்சின்னம் கி.பி 980 இல் (சோழர்கள் இலங்கையின் மீது படையெடுத்த போது). இலங்கையிலிருந்து சீனாவிற்கு கொண்டு வரப்பட்டது என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

உட்புற அறைக்குள் நுழைவது கண்டிப்பாக மட்டுப்படுத்தப்படுகின்றது (குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே உள்நுழைய முடியும், தொலைபேசிகளைக் கொண்டு செல்ல முடியாது, புகைப்படங்கள் எடுக்க முடியாது மற்றும் புனித நினைவுச்சின்னம் குண்டு துளைக்காத கண்ணாடி அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது). 

விகாரையின் பிரமாண்டமான குவிமாடம் ஷக்யமுனியின் தலையின் சித்திரப் பிரதிபலிப்பை ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், போதி மரத்தின் கிளைகள் பரந்து விரிந்து அமையும் வகையில் ஒரு பெரிய கொன்கிரீட் விதானம் அமைக்கப்பட்டுள்ளது.

கி.பி 997 இல் அருகிலுள்ள டா பாவோன் விகாரையின் அப்போதைய தலைமைத் துறவியான அபோட் டெமிங்கினால் விகாரையிலுள்ள கல் நினைவுச்சின்னத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச்சின்னம் 2008 இல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

நியூ ஷூ மலையின் மேலுள்ள கைவிடப்பட்ட ஒரு பெரிய இரும்புத் தாது சுரங்கத்தை யுனிசா அரண்மனை விகாரை கொண்டுள்ளது என்று தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .