Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானைகள், ரயில்களுடன் மோதி உயிரிழப்பதைத் தவிர்க்கும் வகையில், யானைகள் கடக்கும் தண்டவாளங்களுக்கு அண்மையில், அகச் சிவப்புக் கதிர் கமெராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக, வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டப்ளியூ. கே.எஸ் பத்திரண தெரிவித்தார்.
இவ்வாறான கமெராக்களை பொருத்துவதன் ஊடாக, இரவுவேளைகளில், யானைகள் மட்டுமன்றி ஏனைய விலங்குகளும், ரயில்களில் மோதுண்டு பலியாவதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள், பயிற்சிபெற்ற வனஜீவராசிகள் அதிகாரிகளினால், வெலிகந்த பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடைமுறையானது, இலங்கையில் முன்னொருபோதும் மேற்கொள்ளப்படவில்லை. கெமெராக்களின் விலை அதிகம் என்பதனால், அவற்றைக் கொள்வனவு செய்வதில் வனஜீவராசிகள் திணைக்களம் பாரிய நிதிநெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
3 minute ago
7 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
16 minute ago
21 minute ago