Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யொஹான் பெரேரா
ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கையில் எதிரும் புதிருமாக இருந்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், தமது பகைமைகளை மறந்து கைகோர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளை அடுத்தே, இருவரும் தமது பகையை மறந்து கைகோர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (04), மலியதேவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து இருவரும் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, இவர்களின் இந்தப் பகைமை பற்றிக் கேள்வியுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறியைக் கடவுள் காப்பாற்றுவாராக என்று தெரிவித்திருந்த நிலையில், இதற்குப் பதிலளித்த கல்வியமைச்சர், தயாசிறியும் நானும் அதைப் பார்த்துக் கொள்வேன் என்று தெரிவித்தார்.
தவிர, நாடாளுமன்ற உறுப்பினர் அளுத்கமேக்கு பதில் வழங்கிய விளையாட்டுத்துறை அமைச்சர், தானும் கல்வியமைச்சரும் கலந்துரையாடி, விளையாட்டினதும் கல்வியினது அபிவிருத்தி நோக்கிச் செயற்படப்போவதாகவும் கதைகளைத் தயாரிப்பதற்குத்தான் மஹிந்தானந்த இலாயக்கு என்று கூறினார்.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025