2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சம்பூர் மனித எச்சங்கள்;ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிப்பு

Simrith   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட  காணியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும் ஆராய்வதற்கான உத்தேச செலவு மதிப்பீடு நேற்று(26) தொல்பொருள் திணைக்களம்,சட்ட வைத்திய அதிகாரி,சம்பூர் பொலிஸார்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றின் கையொப்பத்துடன் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் சம்பூர் பொலிஸாரினால் சமர்பிக்கப்பட்டது.

இவ் உத்தேச செலவு மதிப்பீடு, மூதூர் நீதிமன்றத்தின் கட்டளையுடன் மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படவுள்ளதுடன் மாகாண நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை எடுத்து கொள்ளப்பட்டது.

 

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X