S.Renuka / 2026 ஜனவரி 05 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் அசாம் மாநிலம் மோரிகோவன் மாவட்டத்திற்கு அருகில் இனறு திங்கட்கிழமை (05) அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதனை NCS எனப்படும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மோரிகோவன் மட்டுமின்றி, அருகில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் எதிரொலித்தது.
இதனை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர்.
கடும் பனிப்பொழிவை சந்தித்து வரும் வடகிழக்கு மாநில மக்கள், நிலநடுக்க அச்சத்தால் திறந்த வெளியில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
அதேசமயம், பாதிப்புகள் தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
13 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago