Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டிருந்த பண்டாரகம, அட்டுளுகம ஆகிய பகுதிகள் இன்று (14) விடுவிக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களிடையே மாத்திரம், கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அட்டுளுகம- காராவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், முதலில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டது.
இவர், டுபாய் சென்று நாடு திரும்பியவர் என்பதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, தனிமைப்படுத்தலுக்காக உள்வாங்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில,; குறித்த நபரின் பெயர் இல்லை என்பது தற்போது மர்மமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு திரும்பிய குறித்த நபர் அட்டுளுகம பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன் பின்னர், கடந்த 26 ஆம் திகதி குறித்த நபருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த நபரின் குடும்பத்தாருக்கும் குறித்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
8 minute ago
19 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
29 minute ago
36 minute ago