2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அடுத்த சட்டமா அதிபராக செயலாற்றல் இல்லாதவரை நியமிப்பதற்குத் திட்டம்

Gavitha   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியூமி பொன்சேகா

சட்டமா அதிபராக இருந்த யுவன்ஜன வனசுந்தர ஓய்வுபெற்றதையடுத்து, அந்த இடத்துக்கு, செயலாற்றல் இல்லாத ஒருவரை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில கூறினார்.

சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டாவிட்டால், முன்னைய சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நடத்த முடியாது போய்விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

சரியான தெரிவு முறைக்கமைய சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத், சட்டமா அதிபராக நியமிக்கப்படவேண்டும் என அவர் கூறினார்.

சுகத கம்லத், வரிசையில் முதலிடத்தில் இருப்பதால், அவரை விரைவாக சட்டமா அதிபராக நியமிக்க வேண்டும். அவர் மிகவும் நேர்மையான திறமையான உத்தியோகத்தர், அவர், பணத்தை அல்லது வேறு சலுகைகளை மதிப்பவர் அல்லர்.
ஆனால், தாம் கட்டுப்படுத்தக் கூடிய, செயற்றினற்ற ஓர் அலுவரை, அரசாங்கம் நியமிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரிப்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் ஒப்பந்தம் செய்திருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதை மறுத்த கம்மன்பில, இது தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு, நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அவர் சவால் விடுத்தார்.

ஸ்ரீல.சு.கவை, ஐ.தே.கவுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்தவர் நிமல் சிறிபால டி சில்வா எனக் கூறிய கம்மன்பில, சிறிபால டி சில்வாவுக்கு ஞாபக மறதி இருக்கலாம் என தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை, ஐ.தே.க, எம்.பியாக நியமித்து, யுத்தக்  குற்ற நீதிமன்றத்தில் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடும் என பிவித்துரு ஹெல உறுமய கூறியுள்ளது.

சீனிகம தேவாலயத்தில், தேங்காய் உடைக்கும் கிரியைகளுக்கு பயன்படுத்தவென, அரச தோட்டத்திலிருந்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தேங்காய் களவாடவில்லை என, கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் கம்மன்பில கூறினார்.

இந்தத் தேங்காய் உடைக்கும் கிரியைக்காக யாராவது திருடியிருந்தால், நாட்டில் இந்தளவுக்கு வறுமைபோனதையிட்டு, அரசாங்கம் வெட்கப்படவேண்டும் என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X