Freelancer / 2025 ஒக்டோபர் 10 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - செம்மணியில் விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத் தூபி அதே இடத்தில் மீளக் கட்டப்பட்டுள்ளது.
அணையா விளக்கு நினைவுத் தூபி விஷமிகளால் நேற்று(09) அதிகாலை அடித்து உடைக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் வரவேற்கின்றதுஎன்ற வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி 'அணையா விளக்கு' போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்றபட்டது. போராட்டத்தின் முடிவில் அந்தப் பகுதியில் அணைய விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த நினைவுத் தூபியைத்தான் விஷமிகள் நேற்று அதிகாலை அடித்து உடைத்திருந்தனர். இதையடுத்து நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளன. (a)

36 minute ago
38 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
53 minute ago
2 hours ago