S.Renuka / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மக்கள் அதிகளவில் பொருட்களை சேகரித்து வரும் நிலையில், தேவையற்ற முறையில் பொருட்களைப் பதுக்கி வைப்பதைத் தவிர்த்து, தமக்குத் தேவையான அளவுக்கு மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அந்த அதிகார சபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், சரியான நடைமுறையின் கீழ் மக்களுக்குத் தேவையான பொருட்களின் அளவை மட்டும் வழங்குமாறு சிறப்பு அங்காடிகள் மற்றும் வர்த்தகர்களிடம் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில், தற்போதுள்ள விலைகள் மற்றும் நியாயமான விலைகளின் கீழ் மட்டுமே பொருட்களை விற்பனை செய்து, அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் ஆதரவு வழங்குமாறு வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செயற்படாத வர்த்தகர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும், அவ்வாறான சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், உதவிகளை சேகரிக்கும் நோக்கில் வீடுகளுக்கு வரும் பொறுப்பற்ற நபர்கள் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
15 minute ago
15 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
16 minute ago
20 minute ago