2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

நன்கொடை வழங்குவதற்கு ’GovPay’ அறிமுகம்

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 'GovPay' ஊடாக நன்கொடைகளை செலுத்தக்கூடிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த 'GovPay' முறைமை தற்போது எவர் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், உடனடியாக நன்கொடைகளைச் செலுத்த முடியும்.

இதில், நன்கொடைப் பணம் உடனடியாக நிதிக்கு வரவு வைக்கப்படுவதுடன், வீட்டில் இருந்தோ அல்லது எங்கிருந்தோ இலகுவாக நன்கொடை வழங்கக்கூடியதாகவும், அத்துடன் அந்த செயல்முறை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

'GovPay' உடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் (Commercial Banks) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட FinTech செயலிகள் (Apps) பலவற்றின் மூலம் இந்த அனர்த்த நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடியும்.

நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வங்கிகள் மற்றும்
FinTech செயலிகளின் பட்டியலை அறிந்துகொள்ள
https://govpay.lk/si/supported-banks-fintech என்ற இணைப்பிற்குச் செல்ல முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X