Freelancer / 2026 பெப்ரவரி 06 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களுக்கு சேவை செய்பவர்களாக இந்த அரசாங்கம் இருக்குமென்றால் அதிவிசேட சாராயத்தின் விலையை குறைக்க வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் மதுபானங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அபேகுணவர்தன கூறுகையில்,
தேசிய மதுபான உற்பத்திகளில் பெருமளவான வரிகள் அரசாங்கத்திற்கு உரியது. அதாவது 750 மில்லி லீட்டர் சாராய போத்லொன்றில் (அதிவிசேட சாராயம்) 1832 ரூபாய் வரி அறவிடப்படுகின்றது. இலங்கையில் அதிகளவில் மது அருந்துபவர்களால் பயன்படுத்தப்படுகின்றது. திருமண வீடுகள் மற்றும் மரண வீடுகளில் அதிகளில் இதுவே அருந்தப்படுகின்றது.
இறுதியில் வேறு சகல மதுபானங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் வைத்தியசாலைகளுக்கு வரும் போது சுகாதார அமைச்சருக்கே அதிகளவில் செலவிட வேண்டிவரும்.இதனால் நீங்கள் புதிய அரசாங்கத்தில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் என்றால், வைத்தியசாலைகளின் செலவுகளை குறைக்க வேண்டுமாயின் சாராயத்தின் விலையை குறைக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .