2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அதிக வேகமே வென்னப்புவ விபத்துக்கு காரணம்

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ- நைனாமடு பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்துக்கு காரணம் அதிக வேகமே என உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான குறித்த கார் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 5 பேர் பயணிக்க வேண்டிய குறித்த காரில் 9 பேர் பயணித்துள்ளமையானது வாகனப் போக்குவரத்து சட்டத்தை மீறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்துக்குள்ளான காரில் பயணித்தவர்கள் திருமண நிகழ்வொன்றுக்கு சென்று திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதால், காரைச் செலுத்திய சாரதி மதுபானம் அருந்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .