2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

அதிரடிப்படைக்கு மோட்டார் சைக்கிள் ? ; பொலிஸார் மறுப்பு

Janu   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட அதிரடிப்படைக்கு (STF), 'அவாண்ட் கார்ட்' (Avant Garde) நிறுவனத்திடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவாண்ட் கார்ட் நிறுவனம் 450cc எஞ்சின் கொள்ளளவு கொண்ட 50 மோட்டார் சைக்கிள்களை இலவசமாக வழங்கவுள்ளதாகவும், அவற்றுக்கு 15 வருடங்களுக்குப் பராமரிப்பு உதவிகளை வழங்கவுள்ளதாகவும் கூறப்படும் தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படைக்கும் குறித்த நிறுவனத்திற்கும் இடையில் அத்தகைய உடன்படிக்கையோ அல்லது ஏற்பாடோ எதுவுமில்லை என்றும் பொலிஸார் மேலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இணையத்தில் பகிரப்படும் சரிபார்க்கப்படாத தகவல்களால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும், துல்லியமான விபரங்களுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .