2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை செய்து தங்கம் மீட்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்தரங்க உறுப்பில் மறைத்துவைத்து தங்கம் கடத்திய பெண், கைது செய்யப்பட்டதுடன், அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் பின்னர் தங்கம் மீட்கப்பட்டது. அந்தப்பெண் தேறிவருகிறார் என யாழ்ப்பாண வைத்தியசாலை தகவல்ககள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டு வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.  கொழும்பை சேர்ந்த இந்த பெண், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் தனது அந்தரங்க உறுப்பில் மறைத்து தங்கத்தை கொண்டு வந்தமை பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சையின் பின் தங்கம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. அப்பெண், பாதுகாப்பு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பதுடன் அவர் தேறிவருகின்றார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .