Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Simrith / 2025 மே 08 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியை தனியார் வகுப்பு நிறுவனத்தில் இழிவுபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படும் குறித்த நிறுவன ஊழியர், மத்திய கொழும்புக்கான தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
அவர் ஒரு NPP ஒருங்கிணைப்பாளராக இருப்பதால், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அடக்க முயற்சிக்கிறதா என்று தாம் சந்தேகிப்பதாக நாமல் பாராளுமன்றத்தில் கூறினார்.
ஒருவர் இறந்த பிறகு JMO அறிக்கை வெளியிடப்படும்போது, JMO அறிக்கையில் சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக எப்படிக் குறிப்பிடப்பட்டது என்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சந்தேகம் எழுப்பினார்.
"இறந்த நபரின் மனநிலை குறித்த அறிக்கை எவ்வாறு வெளியிடப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர் நடாத்திய ஊடக சந்திப்பின் போது தம் மகள் தனியார் வகுப்பு நிறுவன ஊழியரால் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதனால் அம்ஷி மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago