2025 மே 08, வியாழக்கிழமை

“வேள்வி’’ திரைப்படம் பூஜை

R.Tharaniya   / 2025 மே 07 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் அறிமுக இயக்குனர் கவிஷானி ஜே.கே இன் இயக்கத்தில் 
வெளியாக உள்ள முழுநீள திரைப்படமான  "வேள்வி" திரைப்படம் பூஜையுடன்  தொடங்கியது.

தனது  21 வயதிலேயே அறிமுக இயக்குனராக  "வேள்வி" திரைப்படத்தின் மூலம்  இலங்கை தமிழ் சினிமாவுக்குள் கவிஷானி ஜே.கே. தன் முதல்  கால் தடத்தை பதித்துள்ளார்.

ஜே.பி. ப்ரொடக்ஷன் மற்றும் ஜோ பிக்சர்ஸ்  தயாரிப்பில்  இத்திரைப்படம்  வெளியாக உள்ளது.

பெண்களை  மையப்படுத்தி உருவாகவிருக்கும் "வேள்வி" திரைப்படம்  இலங்கை  திரைப்பட வரலாற்றில்  முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படமாக அமையவுள்ளது.

இறையருள் ஆசீர்வாதத்துடன்  கடந்த மே 03ம் திகதி புத்தளம் மணல்குன்று பொம்மக்கன் ஆலயத்தில் படத்தின் பிரம்மாண்டமான ஆரம்ப பூஜை நடைப்பெற்றது.

இயக்குனர், படக்குழுவினர்  மற்றும் கலைஞர்கள் அனைவரும் பூஜையை சிறப்பிக்கும் வகையில் பூஜையில் கலந்து கொண்டு இறை ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இப்படத்தில் அப்துல்லா  முராத் (Cinematographer),
ஜோசப் கே.வி.கே (Codirector),
தனூஷன், நவிதா (Assistant Directors)
கபினா (Co ordinator)
முவாபக் முராத் (Associate director), 
லிதூஷா செல்வராஜ் (Costume Designer), அனு (MUA)
Kitchen (Poster designer and editor),
டேரியன் (Stunt master).

முன்னணி  கலைஞர்கள்  ஏ.கே.இளங்கோ, சேகர்,
நீல் ரெக்சன்,
ஷாமிலா நிசார் ஆகியோர்.

புது முக  கலைஞர்கள் தக்ஷான், ரஜீவன், ஜெம்ஸியன் டில்ஷான், ருசிந்தன் , மில்ரோய், இஸ்மைல், க்ரிஷான் குமார் , கபினா , கவிப்பிரியா, நவிதா , டலாயினி, துஷாந்தினி,கலைநிலா ஆகியோர்.

பூஜை நிகழ்வுகளை    தொகுத்து  வழங்கியது வீ.ஜே. சேது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம்.சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X