Freelancer / 2024 செப்டெம்பர் 27 , மு.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று (26) இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன குழுக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பொதுத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிட வேண்டும் என்பது தமது ஏகோபித்த கருத்து எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். பி திஸாநாயக்க தெரிவிக்கையில், ஒரே கட்சியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உறுதியாக இருந்தாலும் கட்சி மற்றும் சின்னம் பின்னர் முடிவு செய்யப்படும்.
இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி ருவான் விஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். R
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago