S. Shivany / 2021 ஜனவரி 11 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற அமர்வு அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இம் மாதம் 12, 13 ஆம் திகதிகளில் ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகைதந்துள்ளதால் அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாராளுமன்றத்தில் மேலும் 15 உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026