2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’’அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை பலனளித்துள்ளது”

Simrith   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரஸ்பர வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பலனளித்ததாகக் கூறி, இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர், தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தூதுக்குழு திங்கட்கிழமை (22) பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையும் அமெரிக்காவும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் கூறினார்.

"அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை பலனளித்ததாக துணை நிதியமைச்சர் எனக்குத் தெரிவித்தார்," என்று அவர் கூறினார்.

EFF திட்டம் குறித்து IMF உடன் கலந்துரையாடவும், அமெரிக்காவிற்கு இலங்கை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட சமீபத்திய பரஸ்பர வரிகள் குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்துரையாடவும் இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X