2025 மே 23, வெள்ளிக்கிழமை

அமெரிக்க தூதுவரின் வடக்கு விஜயம் நிறைவு

Freelancer   / 2022 ஏப்ரல் 27 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சே சங், வட மாகாண வணிக சமூகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார் என, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் இன்று (27) வரை வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், அங்கு பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்குக்கான விஜயத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு காணப்படும் வாயப்புகள் குறித்து தாம் நேரடியாக கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசியல், பாதுகாப்பு நிலைமைகள் குறித்து, வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோரை சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.

வட மாகாண வணிக சமூகத்தினரை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், தற்போதைய சவால்கள், பொருளாதார மீட்சிகள் குறித்து கலந்துரையாடியதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனித உரிமைகள் மற்றும் ஆளுகை தொடர்பான சவால்கள் குறித்து தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியுள்ளதுடன், தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் தொடர்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியுள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X